மருத்துவமனையில் இருந்த என் தந்தைக்கு ஓடி போய் உதவிய விஜய்!! உருகிய தாடி பாலாஜி!! வீடியோ...

Published : Sep 10, 2021, 04:05 PM IST
மருத்துவமனையில் இருந்த என் தந்தைக்கு ஓடி போய் உதவிய விஜய்!! உருகிய தாடி பாலாஜி!! வீடியோ...

சுருக்கம்

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில், இந்த வார புரோமோவில்... நடிகர் விஜய் குறித்து தாடி பாலாஜி பேசிய தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.  

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில், இந்த வார புரோமோவில்... நடிகர் விஜய் குறித்து தாடி பாலாஜி பேசிய தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

நடிகர் விஜய் வளரும் நடிகராக இருந்த போது, பல படங்களில் தாடி பாலாஜி அவருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். குறிப்பாக 'துள்ளாத மனமும் துள்ளும்', 'ப்ரியமுடன்', உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் விஜய் வளர்ந்த நடிகராக மாறிய பின்னர் தாடி பாலாஜியை விஜய் படங்களில் பெரிதாக பார்க்கமுடியவில்லை.  தாடி பாலாஜிக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர் மிகவும் ஸ்மார்ட்டாக, சின்னத்திரை தொலைக்காட்சிகளை தேர்வு செய்து நிகழ்ச்சி தொகுப்பு, மற்றும் போட்டியாளராக களம் இறங்கி கல்லா கட்டி வருகிறார்.

தாடி பாலாஜி வாழ்க்கையில் பல பிரச்சனைகள் சுழன்று அடித்த போதிலும், அதில் இருந்து அவரை மீட்டு வந்தது விஜய் டிவியும், அதில் தனக்கென இருந்த நட்பு வட்டாரமும் தான் என பல முறை கூறியுள்ளார் தாடி பாலாஜி. தற்போது இவர் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில், நிஷாவுடன் ஜோடி சேர்ந்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பல இளம் போட்டியாளர்கள் இருந்தாலும், இவர்கள் ஆட்டம் படத்தை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.

அந்த வகையில் இந்த வாரம், கோலிவுட் சுற்று நடைபெற உள்ளது. ஏற்கனவே வெள்ளித்திரையில் ரீலிஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆன படத்தின் நடனத்தை பிக்பாஸ் ஜோடிகள் காட்சி படுத்தியுள்ளனர்.  இந்த ரவுண்டில் தாடி பாலாஜியும் நிஷாவும் 'கில்லி' படத்தை தேர்வு செய்து பர்ஃபாம் செய்து நடுவர்களிடம் பாராட்டையும் பெற்றனர். அப்போது 'கில்லி' படத்தை ஏன் தேர்வு செய்தீர்கள் என ஆங்கர் கேட்டதற்கு, தாடி பாலாஜி பல வருடத்திற்கு முன் விஜய் தனக்கு செய்த உதவியை கூறி உருக வைத்துள்ளார்.

அதாவது, விஜயுடன் நடித்து வந்த போது... திடீர் என தன்னுடைய தந்தைக்கு உடல் நலம் இல்லாமல் போய் விட்டது. எனவே, ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் டென்ஷனாக இருந்த என்னை பார்த்து, மற்றவர்களிடம் என்னக்கு என்ன பிரச்சனை என கேட்டு உடனடியாக தன்னுடைய தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் விஜய் 1 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து சென்று காட்டினார். என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து விஜய் ரசிகர்களும் தளபதி ஆல்வேஸ் ரியல் ஹீரோ என்று, கொண்டாடி வருவதோடு, குறிப்பிட்ட இந்த புரோமோவை வைரலாக்கி வருகிறார்கள். அந்த வீடியோ இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Leader Day 1 Box Office : லெஜண்ட் வசூலில் பாதிகூட வசூலிக்காத லீடர்... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
தேர்தலில் மீனாவை டம்மி பீஸ் ஆக்க சிந்தாமணி கையிலெடுக்கும் ஆயுதம் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்