இனி 'அண்ணாத்த' திருவிழா தான்.. பட்டு வேஷ்டி சட்டையில் சூப்பர் ஸ்டார்! கலர் ஃபுல்லாக வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

By manimegalai aFirst Published Sep 10, 2021, 11:37 AM IST
Highlights

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சற்று முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சற்று முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, 'அண்ணாத்த' திரைப்படம் லாக் டவுன் பிரச்சனைக்கு பின், மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கிய நிலையில், கடந்த மே மாதம் படத்தின் அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டு,  தலைவர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படக்குழுவிற்கு குட் பை சொல்லிவிட்டு தனி விமானத்தில் சென்னை திரும்பினார். ரஜினிகாந்த் இல்லாமல் எடுக்கப்பட்ட காட்சிகள் மட்டும் பின்னர் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

தற்போது 'அண்ணாத்த' படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும், மீண்டும் துவங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது. அந்த வகையில் ரஜினிகாந்த் டப்பிங் பணியை முடித்தவும், மீனா, சதீஷ் உள்ளிட்ட பிரபலங்கள் அடுத்தடுத்து டப்பிங் பணிகளை முடித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி இறுதி கட்ட பணிகள் நடந்து வருவதை உறுதி செய்தது.

தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தி வந்த கொரோனா தாக்கம் தமிழகத்தில், கட்டுக்குள் வந்துவிட்டால், தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே 'அண்ணாத்த' படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்ற தீவிர முயற்சியிலும் படக்குழு இறங்கியுள்ளது. நேற்றைய தினம், இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், சற்று முன்னர் வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

திருவிழா செட்டப்பில், தலைவர் பட்டு வேஷ்டி சட்டையில் சும்மா  ஜொலிக்கிறார். அவரை சுற்றிலும் பல ட்ரான்ஸர்ஸ் கலர் ஃபுல் உடையில் ஆட்டம் போடுவது போல் உள்ளது. மேலும் இன்று மாலை 'அண்ணாத்த' படத்தின், மோஷன் போஸ்டர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள படத்தின் போஸ்டர் இதோ.. 


 

The first look we’ve all been waiting for has finally arrived and I can’t keep calm! 😃❤️

Here’s to an adventurous journey ahead 🔥 pic.twitter.com/EyioJUQVzg

— Keerthy Suresh (@KeerthyOfficial)

click me!