
நவீன தொழில்நுட்பங்கள் பெருக பெருக, நம் அன்றாட தேவைகள் மற்றும் செயல்பாடுகளும் மாறிக்கொண்டே வருகிறது. சின்ன திரையில் சீரியல் பார்த்த பலரும் தற்போது இன்டர்நெட் மூலம் வெப் சீரீஸ் பார்க்க துவங்கிவிட்டனர்.
மேலும் வெப்சீரிஸ்க்கு இருக்கும் வரவேற்ப்பு காரணமாக பல முன்னணி நடிகர்களும் இதில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய கவர்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த, மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை. ஏற்கனவே இந்தியில் நடிகை வித்தியா பாலன் நடிப்பில் படமாக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தற்போது சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை வெப்சீரிஸ்சாக எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.
ஆனால் இந்த வெப்சீரிஸை அவர் இயக்க போவது இல்லை. நீலம் ப்ரோடக்சன்ஸ் சார்பில் இதில் தயாரிப்பாளராக இறங்க உள்ளார். இதில் சில்க் ஸ்மிதாவின் ஆரம்ப வாழ்க்கையில் இருந்து அவர் தற்கொலை செய்து கொண்டது வரை ஒட்டு மொத்த வாழ்க்கை பற்றியும் இதில் காட்சிகள் இடம்பெற உள்ளது.
இதற்காக முதற்கட்ட பணியை துவங்கி உள்ள ரஞ்சித். இயக்குனர், நடிகர், நடிகைகள் தேர்வு தேர்வு செய்த பின் விரைவில் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.