
இயக்குனர் ராத மோகன் இயக்கத்தில் தற்போது ஜோதிகா நடித்து வரும் திரைப்படம் 'காற்றின் மொழி'. பாலிவுட்டில் வித்யா பாலன் நடித்து வெற்றி பெற்ற 'தும்ஹாரி சுலு' படத்தின் ரீமேக்காக இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஜோதிகாவிற்கு கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார்.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜோதிகாவின் 10 கட்டளைகளோடு அடங்கிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த படம் குறித்து பேசிய ஜோதிகா... காற்றின் மொழி, தனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது. அதனால் இந்த படத்தில் வசனங்கள் அதிகம் இருந்தும் தானே டப்பிங் பேசி வருவதாக கூறியுள்ளார்.
அதே போல் பெண்கள் சுயமாக சம்பாதித்து, தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்த படி வாழ வேண்டும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது. அதற்கு அவர்கள் குடும்பத்தினரும் ஆதரவு தர வேண்டும். இத்தகைய பெண்களின் மேம்பாட்டிற்கு வழி காட்டும் 10 கட்டளைகளை உள்ளடக்கிய ஒரு போஸ்டர் டிசைன் காற்றின் மொழி படத்திற்கு உருவாக்கியது எனக்கு பிடித்து இருந்தது கோரியுள்ளார்.
அதில் குறிப்பிட்டு இருந்த பெண்களுக்கான பத்து 10 கட்டளைகள்..
1.உன் விருப்பம் போல் உடை உடுத்துவாயாக.
2.நீ விரும்புவதை செய்வாயாக.
3. உன் கணவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டாதிருப்பாயாக.
4.பசித்தால் முதலில் நீயே சாப்பிடுவாயாக.
5.குண்டாய் இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக.
6.வீட்டு பணிகளில் உன் கணவனையும் பங்கெடுக்க செய்வாயாக.
7.நீ சம்பாதித்து உன் விருப்பம் போல் செலவு செய்வாயாக.
8.உன் மனம் மறுப்பதை, ஏற்காதிருப்பாயாக
9.ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை அறிவாயாக.
10.மனதில் பட்டத்தை சொல்வாயாக .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.