நடிகை சில்க் ஸ்மிதா இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே கஷ்டமாக இருக்கிறது என்று நடிகர் மோகன் நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
80 களில் தமிழ் சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. அவரைப்பற்றி நடிகர் மோகன் பேட்டி ஒன்றில் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார்களாக இருந்த ரஜினி, கமல் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் நடித்தவர். புகழின் உச்சத்தில் இருந்த சில்க் சுமிதா யாரும் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்துகொண்டார். திரையுலகையே உலுக்கிய அவரது மரணம் திரை உலகிற்கு பெரிய இழப்பு என பல முன்னணி நடிகர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், மைக் மோகன் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மோகன் ஒரு பேட்டி சில்க் சுமிதா குறித்து மனம் திறந்து பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நீச்சல் குளத்தில் வைத்து ரொமான்ஸ்! விமலா ராமனுடன் எல்லை மீறி சில்மிஷம் செய்யும் வினய்!
"சில்க் சினிமாவில் வேணும்னா கிளாமராக நடிக்கலாம். ஆனால் நிஜத்தில் அவர் ரொம்பவே நல்ல பொண்ணு. ஆரம்பத்தில் இருந்தே பல கஷ்டங்களைத் தாண்டி சினிமாவில் ஜெயிச்சிருக்காங்க. எல்லோரிடமும் ரொம்ப பாசமாக பேசுவார். எனக்கு அவரை நல்லா தெரியும். அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன்" என்று மோகன் கூறியுள்ளார்.
"எனக்கு இன்னொரு விஷயம் ஞாபகம் இருக்கு. சில்க் ஸ்மிதா ஷூட்டிங் நடந்தாலே சூட்டிங் பார்க்க அத்தனை பேரு கூடிருவாங்க. ரசிகர்கள் மட்டும் இல்ல, ப்ரொடியூசரில் இருந்து பைனான்ஸ்காரர்கள் வரை வரைக்கும் அவருக்காக காத்து இருப்பாங்க" எனவும் நடிகர் மோகன் தெரிவித்துள்ளார்.
"எந்த இடத்திலும் அலட்டிக்கவே மாட்டாங்க. ரொம்ப இயல்பா பழகுவாங்க. சூட்டிங் ஸ்பாட்ல இருக்கிற எல்லார் கிட்டயும் சகஜமா பழகுவாங்க. அவர் இல்லாத இழப்பு எல்லாருக்குமே கஷ்டம்தான். அவங்க இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே கஷ்டமா இருக்கு" என்று நடிகர் மோகன் நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
கருப்பு கலர் எப்புடி இருக்கு? ஏடாகூடமாக போஸ் கொடுக்கும் கொழுக் மொழுக் நடிகை பூனம் பாஜ்வா!