சிக்கந்தர் படத்தின் நாயகன் சல்மான் கான், ஏர்போர்ட் வளாகத்தில் காரில் ஏற சென்ற நடிகை ராஷ்மிகாவை தரதரவென இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Shocking Incident Salman Khan Pulled Rashmika From Car : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள 'சிக்கந்தர்' திரைப்படம் ரம்ஜான் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதனிடையே, சல்மான் கான், ராஷ்மிகா மந்தனாவை காரிலிருந்து வெளியே இழுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ராஷ்மிகாவிடம் அத்துமீறிய சல்மான் கான்
சமீபத்தில் வெளியான இந்த வீடியோவில், சல்மான் கான் ராஷ்மிகா மந்தனாவை காரில் இருந்து வெளியே இழுத்து போஸ் கொடுக்க அழைப்பது போல் உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிலர், "அவருக்கு வயதாகிவிட்டது, கட்டுப்படுத்த முடியவில்லை" என்றும், "அவள் அப்பா பார்த்தால் என்ன நினைப்பார்?" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சிக்கந்தர் மூலம் கம்பேக் கொடுத்தாரா ஏ.ஆர்.முருகதாஸ்? விமர்சனம் இதோ
சல்மான் கானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சல்மான் கானின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். ராஷ்மிகா தனது தந்தையுடன் இருப்பது போல் உள்ளது என்றும், சிலர் தனது மகளைப் போல் இருக்கும் ராஷ்மிகாவிடம் இரக்கம் காட்ட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ராஷ்மிகா ஏன் இதை பொறுத்துக் கொள்கிறார் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். கட்டாயப்படுத்தி புகைப்படம் எடுக்க வைக்கிறார் என்றும், சிலர் விமர்சித்துள்ளனர்.
Espe bhi chigma male ke edits bna degi being human PR pic.twitter.com/WWwiZNTDDf
— . (@toxic_logann)31 வயது வித்தியாசம்
சல்மான் கான் நடித்துள்ள 'சிக்கந்தர்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் 26 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ், கிஷோர், ஷர்மன் ஜோஷி, பிரதீக் பப்பர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சல்மான் கானை விட நடிகை ராஷ்மிகா மந்தனா 31 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Sikandar Box Office: சல்மான் கானுக்கு இந்த நிலையா? 'சாவா' பட வசூலை முறியடிக்க முடியாமல் போன சோகம்!