ஆங்கில படத்திற்கு இணையாக உருவாகும் திகில் படம் "அவள்"

 
Published : Oct 07, 2017, 05:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
ஆங்கில படத்திற்கு இணையாக உருவாகும் திகில் படம் "அவள்"

சுருக்கம்

sidharth aval horrer movie

தனக்கு கொடுக்க பட்ட எந்த ஒரு கதாபாத்திரத்தையும் மிக எளிதாகவும் அழகாகவும் நடித்து அசத்துபவர் நடிகர் சித்தார்த். ஒரே  மாதிரியான படங்களில் என்றுமே நடிக்காத நடிகர் என்றால் இவர்தான். 

அவரது நடிப்பில் உருவாகும்  அடுத்த படமான 'அவள்' ஒரு பேய் படமாக  

சுவாரஸ்யமாக எடுக்கப்பட உள்ளது.  உண்மையான அச்ச உணர்வை தூண்டும்  பேய் படங்கள்  தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. 

கடந்த சில ஆண்டு காலமாக உண்மையான பேய் படங்களை விட பேய் காமெடி படங்களே தமிழ் சினிமாவில் வெளி வர ஆரம்பித்து,மக்களிடத்தில் பேய் படம் பார்க்கும் போது வரும் அச்ச உணர்வை தகர்த்து விட்டது என்று கூறலாம்.இது பேய் படம் ரசிக்கும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்து வந்தது.

இந்நிலையில் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியாவின் நடிப்பில், இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மிலிண்ட் ராவ் இயக்கத்தில், 'Etaki Entertainment' நிறுவனமும் 'Viacom 18 Motion Pictures' நிறுவனமும் இணைந்து இந்த உறையவைக்கும்  ஒரு பேய் படத்தை  "அவள்" என்ற தலைப்பில் தயாரித்துள்ளனர். 

சில தினங்களுக்கு முன் வெளியான 'அவள்' படத்தின் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திகிலில்  உறையவைக்கும் ஒரு உண்மையான  பேய் படத்தை காண உள்ளோம்  என்ற எண்ணத்தை  மக்கள் மத்தியில்  விதைத்துள்ளது  இந்த டீஸர். இந்த டீஸர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது. சிறந்த ஒளிப்பதிவு, பயம் உண்டாக்கும்  இசையமைப்பு, படமாக்கியுள்ள விதம், சொல்லப்படவுள்ள கதை, நடிகர்களின் அபாரமான நடிப்பு ஆகியவை இந்த டீசருக்கு இவ்வளவு பெரிய வெற்றியை தந்துள்ளது. உண்மையான  பேய் பட ரசிகர்களுக்கு 'அவள்'  திரைப்படம் ஆங்கில படங்களுக்கு இணையாக இருக்கும் ஒரு திகில்  படம் எனக் கூறலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மதகஜராஜா முதல் டூரிஸ்ட் ஃபேமிலி வரை... 2025-ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் மூவீஸ்
ரீ-ரிலீஸுக்கு ரெடியான ரஜினிகாந்தின் பக்கா மாஸ் படம் ‘படையப்பா’... எப்போ வெளியாகிறது தெரியுமா?