கல்லூரி மாணவர்களால் விரட்டப்பட்ட ஜூலி... மேடையிலிருந்து தெறித்து ஓடிய சம்பவம்... நடந்தது என்ன?

 
Published : Oct 07, 2017, 04:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
கல்லூரி மாணவர்களால் விரட்டப்பட்ட ஜூலி... மேடையிலிருந்து தெறித்து ஓடிய சம்பவம்... நடந்தது என்ன?

சுருக்கம்

Bigg Boss Julie Dance Performance in Jeppiaar Engineering College

பிரபல கல்லூரி மாணவர்களால் மேடையிலிருந்து விரட்டப்பட்ட ஜூலி வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

SAIL என்ற பொது தொண்டு நிறுவனம் கடந்த வருடம் பதினெட்டு குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகச்சைக்கு செய்துள்ளனர். இதேபோல பல தொண்டுகள் இவர்கள் நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் யாருடைய உதவியும் இல்லமால் இந்த தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து செய்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் முற்றிலும் வித்தியாசமான எண்ணங்கள் கொண்டவர்கள் நேற்று இன்ஷ்பெயர் பெண்கள் என்ற விருது விழா நடத்தினார்கள். இந்த விழா ஜேப்பியார் கல்லூரியில் நடந்து. இதில் பலதுறை பெண்களை தேர்ந்தெடுத்து விருது கொடுத்தனர்.

இந்த விழாவில் வரும் பணத்தில் இந்த வருடம் மேலும் பத்து குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த விழாவில் கலைநிகழ்ச்சி நடந்தது.

இந்த விழாவில் ஜல்லிக்கட்டு புகழை வைத்துக்கொண்டு பிக் பாஸில் பங்கேற்ற ஜூலி நடனமாடினார்.  கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிரபல தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஜூலி.  

இதே நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் ஓவியா. இவர் மீது பொய்யான குற்றசாட்டை கூறி ஜல்லிக்கட்டில் பெற்ற பெயரை கெடுத்துக் கொண்டார் ஜூலி. இதனால் இவர் பெரும் பெரும்பாலான ரசிகர்களுக்கு இன்னும் கோவம் குறையவில்லை.

இந்நிலையில் பிரபல கல்லூரி விழா ஒன்றில் ஜூலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் இவர் பேசும் போது ஒட்டு மொத்த மாணவ மாணவியர்களுக்கு ஓவியா ஓவியா, ஓவியா என நிறுத்தல் தொடர்ந்து கோஷம் போட்டனர்.  ஜூலியை பேசவே விடவில்லை. அசிங்கப்பட்ட ஜூலி மேடையில் இருந்து கீழே இறங்கி போய்விட்டார்.

மாணவர்கள் மத்தியில் அசிங்கம் தாங்காமல் மேடையை விட்டு இறங்கி ஓடிய இந்த வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!
டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?