
கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் பல ஆண்டுகளுக்கு முன் எடுத்த தனிப்பட்ட நிலைப்பாடு தமிழ் சினிமா நடிகர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். இந்தியன் 2 பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் மற்றும் சித்தார்த் முதன்முதலில் இணைந்துள்ள படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்தின் 2வது பாகமாக உருவாகியுள்ள இந்தப் படம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஊழலை எதிர்க்கும் இளைஞரின் பாத்திரத்தில் சித்தார்த் நடத்துள்ளார்.
பான் இந்தியா படமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சித்தார்த், கமல்ஹாசனுடன் பணிபுரியும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தது கடவுள் அளித்த பரிசு என்று கூறினார்.
மியாமியில் ஒத்தையாக ஊர் சுற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்! க்யூட்டி, பியூட்டி என்று கொஞ்சும் ரசிகர்கள்!
தொடர்ந்து பேசிய நடிகர் சித்தார்த், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற ஜாம்பவான்கள் தன்னைப் போன்ற பல நடிகர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளனர் என்று குறிப்பிட்டார். “ரஜினி சார், கமல் சார் இருவரும் பல வருடங்களுக்கு முன் ஒரு முக்கிய முடிவை எடுத்தார்கள். இனி அவர்கள் மது, புகைத்தல், பான் மசாலா விளம்பரங்களுக்கு ஆதரவு கொடுக்கமாட்டோம் என்று முடிவு செய்தார்கள்" என்று அவர் நினைவுகூர்ந்தார்.
"அவர்கள் முன்னுதாரணமாக இருப்பதால் யாரும் அதைச் செய்வதில்லை. எங்கள் துறையில் இதுபோன்ற இரண்டு ஜாம்பவான்கள் இருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவர்கள் இரண்டு பேரும் பல வகையில் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள்" எனவும் சித்தார்த் கூறினார்.
நடிகர் சித்தார்த் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் ஷங்கருடன் மீண்டும் இணைகிறார். இதற்கு முன் பாய்ஸ் படத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடித்திருந்தால். மெகா ஹிட்டான அந்தப் படத்துக்குப் பின் இந்தியன் 2 படத்தில் இருவரும் சேர்ந்து பணிபுரிந்துள்ளனர்.
இயக்குநர் ஷங்கர் பற்றித் தெரிவித்த சித்தார்த், “எனது வாழ்க்கையில் 200 நாட்களுக்கு மேல் ஷங்கர் செட்டில் இருந்த பெருமை எனக்கு கிடைத்தது" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய குறிப்பில், தேசபக்தி திரைப்படங்கள் எப்போதுமே சீசனின் சுவையாக இருந்து வருகின்றன, மேலும் ஹிந்துஸ்தானி 2 அலைவரிசையில் சமீபத்திய கூடுதலாகும். எவ்வாறாயினும், இந்தத் திரைப்படங்கள் பல திரைப்பட ஆர்வலர்களின் ஆய்வுக்கு உட்பட்டுள்ளன, அவர்கள் தங்கள் ஜிங்கோயிசம் மற்றும் நெஞ்சைத் துடிக்கும் தேசியவாதத்தை அழைத்தனர். இது குறித்து சித்தார்த் கூறும்போது, “தமிழ் திரையுலகில் நாங்கள் ஒரு ஜோக். ஏதோ மிகவும் நாடகமாக இருக்கும் போது, இட்னா வயலின் கியூன் பாஜா ரஹா ஹை என்று சொல்கிறோம்?
180 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சிம்புவின் அடுத்த படம்! பான் இந்தியா படத்துக்கு ரெடியாகும் STR!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.