தொடரும் நடிகர் விஷாலின் கல்வி சேவை! தேவி அறக்கட்டளை மூலம் 2024-ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவ - மாணவிகள்!

Published : Jul 10, 2024, 08:40 AM IST
தொடரும் நடிகர் விஷாலின் கல்வி சேவை! தேவி அறக்கட்டளை மூலம் 2024-ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவ - மாணவிகள்!

சுருக்கம்

நடிகர் விஷால் தனது அம்மா அவர்களின் பெயரில் 'தேவி அறக்கட்டளை' மூலம் பலவருடங்களாக ஏழை எளியோர்க்கு உதவி செய்வதுடன், வருடம் தோறும் 12-ஆம் வகுப்பு முடித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தும்  மேற்க்கொண்டு  படிக்க முடியாத மாணவர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளை கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கவைத்து வருகிறார்.   

இந்த வருடம் 2024ஆம் ஆண்டு கல்லூரி படிப்பிற்கான சேர்க்கையில் விவசாய குடும்பங்கள், முதல்நிலை பட்டதாரிகள் மற்றும் தாய் தந்தை இல்லாத வறுமை கோட்டிற் கீழ் உள்ள ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் சேர்க்கை பதிவும் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்று அதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்கள்  கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில்  படிப்பிற்கு உதவி செய்துள்ளார். 

“அன்னை தெரசா” அவர்களின் பெயரில் சாலையோரங்களில் வசிக்கும்  ஆதரவுற்ற முதியோர்கள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான உபகாரங்கள் போர்வைகள் மற்றும் உணவு வழங்குவதுடன்,  அதில் மிகவும் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட முதியோர்களை மீட்டு காவல் துறை அனுமதியுடன் முதியோர் இல்லம் மற்றும் மனநல மருத்துவமனைகளில்  முறையாக சேர்த்து பராமரித்து பாதுகாத்து வருகிறார்.

ஐடி கம்பெனி முதல்.. 3000 ஏக்கரில் விவசாயம் வரை! அமெரிக்கர்களை அசர வைக்கும் நெப்போலியனின் Net Worth விவரம்!

“தேவி சக்தி” என்ற திட்டத்தின் மூலம் வறுமையில் தனது குடும்பத்தை நடத்தும் குடும்ப தலைவி பெண்களை ஊக்கவிக்கும் வகையில் அவர்களின் திறன்களை மேம்படுத்தும் விதத்தில் அவர்களுக்கு பொருளாதார மற்றும் சமூக ரீதியாகவும் தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் “தேவி சக்தி” திட்டத்தின் கீழ் தையல், கணினி போன்ற  பயற்சி வகுப்புகள் அளித்தும் அதற்கான சான்றிதழ் மற்றும் உபகரணங்கள் வழங்கி வருவதையும் தொடர்ந்து செய்கிறார்.

அதே போல் “கொரோனா” காலகட்டங்களில் இயற்கை பேரிடர் காலங்களில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி உதவிகளை வழங்கி கை கொடுத்துள்ளார். மேலும் “இந்திய நாட்டின் முதுகெலும்பு விவசாயம்”, அந்த விவசாயத்தை காக்கும் விதமாக "விவசாயிகளுக்கு கைகொடுப்போம்" திட்டத்தின் கீழ் நலிவடைந்த விவசாய குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்வதுடன்.
மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் கருவேல மரங்களை அழிப்பதுடன், பனை விதைகள் மரக்கன்றுகளை பல்வேறு மாவட்டங்களில் விதைத்து வருகிறது அவரின் குழு.

Premgi: அதுக்குள்ளயேவா? கணவர் பிரேம்ஜிக்கு முத்த மழை பொழிந்தபடி... குட் நியூஸ் சொன்ன இந்து! குவியும் வாழ்த்து!

"உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்” என்பதின் பேரில் இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம்ங்கள்  நடத்தி அதில் மிகவும் பாதிக்கப்பட்ட ஏழை எளியோர்கள் மற்றும் முதியோர்களுக்கு மருத்துவ உதவி வழங்கி வருகின்றனர். தேசியத் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும்  நண்பர்கள், உறவினர்களின் பிறந்த நாள், மற்ற விழாக்களான  பொங்கல்,  தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய தினங்களில் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தைகள் இல்லங்களில் உணவு, உடை  வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார் விஷால்.

வருடம் தோறும் மறைந்த “முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம்” அவர்களின் பெயரில் வறுமைக்கு உட்பட்டு ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்குவதுடன், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் மேற்க்கொண்டு  படிக்க முடியாத மாணவர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளை தத்தெடுத்து கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கவைத்து வருகிறோம்.  

அம்மாவின் 70-ஆவது பிறந்த நாளில்... அரிய புகைப்படங்களுடன் பிள்ளை பாசத்தை வெளிப்படுத்திய சிவாஜி பேரன் சிவகுமார்!

அதே போன்று  இந்த வருடம் 2024ஆம் ஆண்டு கல்லூரி படிப்பிற்கான சேர்க்கையில் விவசாய குடும்பங்கள், முதல்நிலை பட்டதாரிகள் மற்றும் தாய் தந்தை இல்லாத வறுமை கோட்டிற் கீழ் உள்ள ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் சேர்க்கை பதிவும் கலந்தாய்வு கூட்டம் நடத்தி அதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்கள்  கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்துடன் விஷால் அறிவித்துள்ள நிலையில், பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.                   

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa