
ஹைதராபாத்தில் நடைபெறும், இந்த படத்தின் முதல் ஷெடியூலில் முக்கியமான காட்சிகள் மற்றும் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நடிகை ஸ்ருதி ஹாசன் நடிகர் ஆத்வி சேஷுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்ட செல்ஃபியைப் பகிர்ந்து, இனிமையான ஷீட்டிங் அனுபவம் எனக்குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு முன்னாள் காதலர்கள், தங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டி, தொடர்ச்சியான கொள்ளைகளை ஒன்றாக இணைந்து செய்கிறார்கள். இதனை பரபரப்பான திருப்பங்களுடன் சொல்லும் திரைப்படம் தான் ‘டகோயிட்’.
ஆத்வி சேஷின் 'க்ஷணம்' மற்றும் 'கூடாச்சாரி' உள்ளிட்ட பல தெலுங்கு பிளாக்பஸ்டர் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய, ஷனைல் தியோ இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆத்வி சேஷு மற்றும் ஸ்ருதி ஹாசன் முதல் முறையாக இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த திரைப்படத்தை சுப்ரியா யர்லகட்டா தயாரிக்க, சுனில் நரங் இணை தயாரிப்பு செய்துள்ளார் மற்றும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் இப்படத்தினை வழங்குகிறது. இப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஆத்வி சேஷ் மற்றும் ஷனைல் தியோ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். 2022 ஆம் ஆண்டு பெரும் பாராட்டுக்களைக் குவித்த “மேஜர்” திரைப்படத்திற்கு பிறகு உருவாகும், ஆத்வி சேஷின் இரண்டாவது இந்திப் படம் இதுவாகும். படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். ஸ்ருதி பான் இந்தியா படமான சலார் படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது மீண்டும் பான் இந்தியா படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.