
திருமணத்திற்கு பின்பும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஸ்ரேயா தற்போது 'சண்டைக்காரி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். எனவே இவர் குறித்து பிரபல நாளிதழுக்கு இந்த படத்தின் இயக்குனர் மாதேஷ் பேட்டி கொடுத்துள்ளார்.
தமிழி, திரையுலகில் மும்பை, மற்றும் கேரளாவில் இருந்து வந்த நடிகைகள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது மதுர, அரசானம், மோகினி, மிரட்டல் ஆகிய படங்களை இயக்கிய மாதேஷ், நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கி வரும் திரைப்படம் 'சண்டைக்காரி' கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்டு எடுக்க படும் இந்த படத்தில் 'AAA ' படத்திற்கு பிறகு நடிகை ஸ்ரேயா நாயகியாக நடித்து வருகிறார்.
படத்தின் நாயகி ஸ்ரேயா... எந்த தொல்லையும் கொடுக்காத நடிகை என அவரை பாராட்டியுள்ளார். அதாவது மும்பையில் இருந்து நடிக்க வரும் நடிகைகள் சம்பளம் ஒரு புறம் இருந்தாலும், அதை தவிர்க்கு அவர்களது பாடி கார்டுகள் சம்பளத்தையும் தயாரிப்பாளர்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைப்பார்கள். ஆனால் ஸ்ரேயா அப்படி இல்லையாம்.
எந்த வித பந்தாவும் காட்டாமல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குறித்த நேரத்துக்கு வந்து ஆஜராகி விடுவதுடன், அவர் தனக்கென பாடி கார்டுகளை வைத்து கொள்வது இல்லையாம். அதே போல் தன்னுடைய காட்சி எடுத்து முடிக்கப்பட்டு விட்டாலும், மற்ற நடிகர்களின் நடிப்பை பார்த்து ஷூட்டிங் ஸ்பாட்டில் உச்சாக படுத்துவாராம். எனவே தனக்கு எந்த வித, தொல்லையும் அவர் கொடுத்தது இல்லை என தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இதுகுறித்த சிறு பயம் தனக்கு இருந்தாலும், மற்ற சில மும்பையை சேர்ந்த நடிகைகளை போல் இவர் இல்லை என ஸ்ரேயாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.