சந்தானத்தின் நெருங்கிய உறவினர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு! திட்டமிட்ட கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

Published : May 23, 2021, 12:52 PM ISTUpdated : May 23, 2021, 12:54 PM IST
சந்தானத்தின் நெருங்கிய உறவினர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு! திட்டமிட்ட கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

சுருக்கம்

தன்னுடைய பாணியில், காமெடி கலந்த ஹீரோக்கள் கதையை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சந்தானம் குடும்பத்தினரின், நெருங்கிய உறவினர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய பாணியில், காமெடி கலந்த ஹீரோக்கள் கதையை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சந்தானம் குடும்பத்தினரின், நெருங்கிய உறவினர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தானத்தின் நெருங்கிய உறவினர் பெண் ஜெயபாரதி. இவருக்கும் அமெரிக்காவை சேர்ந்த மென்பொருளாளர், விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் பெற்றோர் விருப்பப்படி திருமணம் நடந்துள்ளது.

மேலும் செய்திகள்: நினைவை விட்டு நீங்காத 'பாண்டியன் ஸ்டோர்' சித்ரா...! பலரும் பார்த்திடாத ரேர் போட்டோஸ்..!
 

திருமணத்திற்கு பின், ஜெயபாரதி கணவருடன் அமெரிக்காவுக்கே சென்றார். ஆரம்பத்தில் வாழ்க்கை இனிமையானதாக இருந்தாலும், பின்னர், இருவருக்கு இடையிலும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் எழுந்தது. இதனால், ஒரு கட்டத்தில் ஜெயபாரதி அமெரிக்காவில் இருந்து மகளுடன் சென்னைக்கு வந்து பெற்றோருடன் வாசிக்க துவங்கினார். 

மேலும், சென்னை தபால் அலுவலகத்தில், தற்காலிக பணியாராக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கணவர் குறித்து அவர் பணியாற்றும் அலுவலகத்தில் ஜெயபாரதி புகார் கூறி இருந்ததாகவும், இதனால் இவரது கணவர் விஷ்ணு பிரகாஷ் அந்த புகாரை திரும்ப  பெறக்கூறி மிரட்டல் விடுத்தது வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: நயன்தாராவை அடுத்து தடுப்பூசி சர்ச்சையில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்! ஊசியே காணும் என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்!
 

இந்நிலையில், ஜெயபாரதி தன்னுடைய பணியை முடித்து கொண்டு வீடு திரும்பிய போது, ஏடிஎம் மற்றும் வங்கிகளுக்கு பணம் ஏற்றி செல்லும், மினி டிரக் மோதியதில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், ஜெயபாரதியின் பெற்றோர்... இவரது கணவர் விஷ்ணு பிரகாஷ் மீதி சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளதை தொடர்ந்து, இது எதேர்சையாக நடந்ததா? அல்லது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா என்கிற சந்தேகத்தில் அடிப்படியில் விசாரணை செய்து வருகிறார்கள்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!