பற்றி எரியும் 'தி ஃபேமிலி மேன் 2 ' பட சர்ச்சை..! அமைதியாக இருங்கள் சமந்தா போட்ட அதிரடி பதிவு..!

Published : May 22, 2021, 04:30 PM IST
பற்றி எரியும் 'தி ஃபேமிலி மேன் 2 ' பட சர்ச்சை..! அமைதியாக இருங்கள் சமந்தா போட்ட அதிரடி பதிவு..!

சுருக்கம்

தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக, நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'தி ஃபேமிலி மேன் 2 ' வெப் சீரிஸ், பற்றி நடிகை சமந்தா போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக, நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'தி ஃபேமிலி மேன் 2 ' வெப் சீரிஸ், பற்றி நடிகை சமந்தா போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் செய்திகள்: கொரோனா தேவி சிலையோடு ஒப்பிட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்! கடுப்பாகி வனிதா போட்ட பதிவு!
 

இயக்குனர் ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள 'தி ஃபேமிலி மேன்' இணையதள தொடரின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, தற்போது இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களை கண்டறிந்து தடுப்பது போலவும், சென்னையில் குண்டு வெடிப்பிற்கு இலங்கையைச் சேர்ந்த தீவிரவாதிகள் திட்டமிட படுவது போன்றும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த காட்சிகளில் இலங்கையைச் சேர்ந்த தீவிரவாத தமிழ் பெண்ணாக சமந்தா நடித்துள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன் வெளியான ட்ரைலரில் இருந்து இந்த தகவல் தெரியவந்தது. மேலும் இந்த வெப் சீரிஸுக்கு தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இயக்குனரும், 'நாம் தமிழர் கட்சியின்' ஒருங்கிணைப்பாளருமான சீமான், தமிழர்களை தவறாக இந்த வெப் சீரிஸ் சித்தரித்துள்ளதாக தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: திருமணம் ஆகி... குழந்தை பெற்ற பின்பும் கொள்ளை அழகில் 'ராஜா ராணி' ஆல்யா மானசா! லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

மேலும் ஜூன் 4 ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படும் இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், இப்படி தீயாக பற்றி எரியும் சர்ச்சை குறித்து, நடிகை அதிரடி பதிவு ஒன்றை போட்டுள்ளார். 

மேலும் செய்திகள்: சமந்தா, பிரகாஷ் ராஜ், போன்ற பல நடிகர்களை கலங்க வைத்த முக்கிய பிரபலத்தின் மரணம்!
 

அதில்.. "அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்" என்று பதிவு செய்து மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான 'முழுப்பாதையும் தென்படாவிட்டாலும் முதலடியை எடுத்து வைப்பதற்கு நம்பிக்கையே முக்கியம்'  என்பதையும் பதிவு செய்துள்ளார். இவரது இந்த பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்