Radhe Shyam movie : செட் அமைக்க மட்டும் ரூ.100 கோடி செலவு.... பிரபாஸ் படத்திற்காக காசை வாரி இறைத்த படக்குழு

Ganesh A   | Asianet News
Published : Feb 25, 2022, 12:48 PM IST
Radhe Shyam movie : செட் அமைக்க மட்டும் ரூ.100 கோடி செலவு.... பிரபாஸ் படத்திற்காக காசை வாரி இறைத்த படக்குழு

சுருக்கம்

1970-களில் நடப்பது போன்று திரைக்கதை உள்ளதால் ஏராளமான காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டதாம். அதானால் தான் செட் அமைப்பதற்கு மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் செலவானதாக கூறப்படுகிறது.

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தார் பிரபாஸ் (prabhas). இதையடுத்து இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவர் கைவசம் ஆதிபுருஷ், ராதே ஷ்யாம், ஸ்பிரிட், சலார் போன்ற படங்கள் உள்ளன.

இதில் ராதே ஷ்யாம் படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja hegde) நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இது முழுக்க முழுக்க ரொமாண்டிக் படமாக உருவாகி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ராதே வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், இந்த படத்திற்காக போடப்பட்ட செட்களின் மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. 1970-களில் நடப்பது போன்று திரைக்கதை உள்ளதால் ஏராளமான காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டதாம். அதானால் தான் செட் அமைப்பதற்கு மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் செலவானதாக கூறப்படுகிறது.

ராதே ஷ்யாம் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.350 கோடியாம். குறிப்பாக இப்படத்திற்காக போடப்பட்ட மருத்துவமனை செட் ஒன்றை கடந்தாண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த சமயத்தில் தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ள படக்குழு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!