Vijay emergency number : வாவ்... விஜய் படத்தை கொண்டு அவசர எண் விளம்பரம் செய்த போலீசார்...

By Kanmani P  |  First Published Feb 24, 2022, 10:15 PM IST

Vijay emergency number : கேரளாவில் அவசர உதவி எண்ணை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் அங்குள்ள போலீசார் நடிகர் விஜயின் படங்களை வைத்து வித்தியாசமாக விளம்பரம் செய்துள்ளது வரவேற்பை பெற்று வருகிறது.


பெண்கள், குழந்தைகள் வெளியில் செல்வது மிகக்கடினமான சூழல் ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் அவசர எண் என்பது அத்யாவசிமாகி விட்டது...காவல் துறை, தீயணைப்பு,ஆம்புலன்ஸ், அதிகாரிகள் மீதான புகார், கையூட்டு புகார் என அவசர தேவைக்கான நம்பர் தவறி புகார் என் கூட மக்கள் மனதில் எளிதில் பதியும் வண்ணமே கொடுக்கப்படுகிறது..

பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்துகளில் எங்கு பார்த்தாலும் அவசர தேவைக்கு என குறிப்பிட்ட தொலைப்பேசி என் கொடுக்கப்பட்டிருக்கும்..இந்த எண்ணுக்கு அழைப்பு விடுக்க கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு.. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி எண்கள் கொடுக்கப்பட்டிருப்பதால் ஒரு ஊரில் இருந்து மற்றோரு இடத்திற்கு செல்லும் மக்கள் அவசர எண்ணை கண்டுபிடிப்பதில் சிக்கல் தான்.

Tap to resize

Latest Videos

 அதோடு இந்த அநேக அவசர தேவை எண்களில்  சிலருக்கு 100 யை தவிர மற்ற எண்கள் மனதில் நிர்ப்பதே இல்லை..இதற்கு ஒரு சோலியூசனாக மத்திய அரசு அணைந்து அவசர தேவைகளுக்கும் ஒரே நம்பர் அதுவும் நாடு முழுவதுக்கும் ஒரே எண் என்னும் முடிவை எடுத்துள்ளது..அதற்கான பிரத்யேக எண்ணையும் அரசு அறிவித்து விட்டது..அதாவது '112' என்னும் எண்ணிற்கு அழைத்தால் போதும் எந்த அவசர தேவைக்கும் உதவி கிட்டும்.. இந்த திட்டத்தில் ஏற்கனவே பல மாநிலங்கள் இணைந்து விட்ட நிலையில் ..தற்போது கேரள மணிலா போலீசார் இந்த எண்ணிற்கான விளம்பரத்தை துவங்கியுள்ளனர்..இதற்கான விளம்பர வீடியோவை புது யுக்தியை வடிவமைத்துள்ளனர்..

கேரளாவில் விஜய்க்கென தனி ரசிகர்  பட்டாளம் இருப்பது நாம் அறிந்த விஷயமே..இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ள எண்ணிய கேரள காவல்துறை ..விஜய் பட காட்சிகளை எடிட் செய்து விளம்பரம் உருவாக்கியுள்ளனர். அந்த காணொளியில் போக்கிரி படத்தில் அசின் பிரச்சனையில் சிக்கியுள்ள போது அவரது தம்பி விஜய்க்கு போன் செய்யும் காட்சியில் 112 என்னும் எண்ணை  டயல் செய்வது போன்று எடிட் செய்துள்ளனர்..பின்னர் கால செய்த சில வினாடிகளில் தெறி படத்தில் பள்ளிக்கூடம் முன்பு விஜய் போலீஸ் யூனிஃபாமில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் காட்சியை வைத்தது 112 என்னும் அவசர எண்ணை விளம்பர படுத்தியுள்ளனர்...

 

If you or anyone you know is stuck in an emergency, dial 112 and we will be there for you! pic.twitter.com/EwZntZeoqT

— Kerala Police (@TheKeralaPolice)

 

click me!