'பாக்கிய லட்சுமி' சீரியலில் இருந்து திடீர் என வெளியேறிய நடிகை..! இனி அவருக்கு பதில் பிக்பாஸ் பிரபலம்..!

Published : Jul 05, 2021, 04:52 PM ISTUpdated : Jul 06, 2021, 11:22 AM IST
'பாக்கிய லட்சுமி' சீரியலில் இருந்து திடீர் என வெளியேறிய நடிகை..! இனி அவருக்கு பதில் பிக்பாஸ் பிரபலம்..!

சுருக்கம்

இந்த சீரியலில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நந்திதா ஜெனிபர் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், தற்போது இவர் திடீர் என ஒரு சில காரணங்களால் சீரியலை விட்டு விலகியுள்ளார். 

விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எப்போதுமே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடும். ஒரே மாதிரி கதை அம்சத்துடன் இல்லாமல், வித்தியாசமான கதைகளையும், புதிய புதிய திறமையாளர்கள் நடிப்பையும் முன்னிறுத்துவதாலேயே  சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது.

அந்த வகையில், ஒரு அழகிய குடும்பத்தை மைய படுத்தி எடுக்கப்பட்டு வரும் சீரியல் 'பாக்கிய லட்சுமி'. எந்நேரமும், எதற்கெடுத்தாலும் கடுப்பாக பேசும் கணவரை எப்படி குடும்ப தலைவி சமாளிக்கிறார்.  பிள்ளைகளின் ஆசை, மாமியார் மாமனார் என அனைவரையும் நல்ல படியாக பார்த்து கொள்கிறாள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. 

தன்னுடைய கணவர் மீது எப்போதுமே சந்தேக படாத பாக்கிய லட்சுமியின் கணவர் கோபிக்கு, ராதிகா என்கிற பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் ராதிகாவும் - பாக்கிய லட்சுமி குடும்பத்தினரும் நண்பர்களாக மாறியதால், கோபி இருவருக்கும் தெரியாமல் தன்னை காப்பாற்றி கொள்ள செய்யும் அட்ராசிட்டி சில நேரங்களில் சிரிப்பை வரவைத்தாலும், பல நேரங்களில் கடுப்பை ஏற்படுத்தும்.

இந்த சீரியலில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நந்திதா ஜெனிபர் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், தற்போது இவர் திடீர் என ஒரு சில காரணங்களால் சீரியலை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதில், தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, வேலைனு வந்தா வெள்ளைக்காரன் உள்ளிட்ட சில படங்களிலும், அன்பே வா போன்ற சீரியல்களிலும் நடித்த ரேஷ்மா நடித்து வருகிறார்.

இவர் நடித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது, அதே நேரத்தில் நந்திதா ஜெனிபர் ஏன் நடிக்க வில்லை என்பது போன்ற கேள்விகளையும் பலர் எழுப்பி வருகிறார்கள். இதற்கு அவரது தரப்பில் இருந்து என்ன பதில் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?
அதே 4 ஸ்டெப்... ரம்யா ஜோ இன்னும் மாறவே இல்ல; மீண்டும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட வீடியோ வைரல்