
இந்தியாவில் மீண்டும் கோரமுகத்தை காட்டி, மக்களை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. மேலும், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனாவால்பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார்.
இரண்டாவது முறையாக தன்னுடைய கோரத்தாண்டவத்தை துவங்கியுள்ள கொரோனாவின் பிடியில் இதுவரை, ரன்பீர் கபூர், அமீர் கான், ஆலியா பட், மாதவன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கௌரி கிஷன், என அடுத்தடுத்து பல பிரபலங்கள் பாதிக்க பட்டு வருகிறார்கள். குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள், அந்த வகையில் தற்போது நடிகர் அக்ஷய் குமார் இன்று காலை கொரோனா தொற்று தனக்கு உறுதி செய்யப்பட்டு, வீட்டில் தனிமை படுத்தி கொண்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது... "இன்று காலை கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, தனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. உடனடியாக என்னை தனிமை படுத்தி கொண்டு, சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார். விரைவில் நலமடைவேன் என அக்ஷய்குமார் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகை தாண்டி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்... '2 . ஓ ' படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர். இதை தொடர்ந்து, இவரது ரசிகர்கள் விரைவில் அக்ஷய் குமார் பூரண உடல் நலம் பெற வேண்டும் என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.