உலகநாயகனின் ரீல் மகளுக்கு கொரோனா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published : Apr 04, 2021, 10:21 AM IST
உலகநாயகனின் ரீல் மகளுக்கு கொரோனா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சுருக்கம்

இந்தியாவில் மீண்டும் கோரமுகத்தை காட்டி, மக்களை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. மேலும், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனாவால்பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் மீண்டும் கோரமுகத்தை காட்டி, மக்களை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. மேலும், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனாவால்பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாகவும், 'பாபநாசம்' படத்தில் கமலுக்கு மகளாகவும், 'தர்பார்' படத்தில் ரஜினிக்கு மகளாகவும் நடித்த நிவேதா தாமஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது முறையாக தன்னுடைய  கோரத்தாண்டவத்தை துவங்கியுள்ள கொரோனாவின் பிடியில் இதுவரை, ரன்பீர் கபூர், அமீர் கான், ஆலியா பட், மாதவன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கௌரி கிஷன், என அடுத்தடுத்து பல பிரபலங்கள் பாதிக்க பட்டு வருகிறார்கள். அனைவருக்குமே பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் மருத்துவர்களின் அறிவுத்தல்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகை நிவேதா தாமஸும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக தமிழில் ஒளிபரப்பான ராஜ ராஜேஸ்வரி, மை டியர் பூதம் போன்ற சீரியல்களால் பிரபலமான இவர், தற்போது தெலுங்கு திரையுலகில், முன்னணி நாயகியாக வலம் வரும் நிலையிலும், கோலிவுட் திரையுலகில் ஹீரோயினாக நிலைக்க முடியவில்லை. எனினும் அவ்வப்போது, முன்னணி நடிகர்களின் தங்கை, ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் மகள் போன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தற்போது இவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, வீட்டில் தனிமையில் இருப்பதாகவும்... மருத்துவர்களின் அறிவுரை படி மருந்து மாத்திரைகள் எடுத்து கொண்டு நலமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டும் இன்றி, வெளியில் செல்லும் போது அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!