பாஜக வேட்பாளருக்கு சூப்பர் ஸ்டார் நடிகர் ஆதரவு... எதிர்க்கட்சிகளை தலை தெறிக்கவிட்ட வைரல் வீடியோ...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 3, 2021, 2:33 PM IST
Highlights

வர உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இவர்கள் எல்லாம் பேரவையில் இருந்தால் நன்றாக இருக்கும் என தான் விரும்புவதாக பிரபல நடிகர் மோகன் லால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன், சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அதுமட்டுமின்றி கேரளாவிற்கு தொழில் வளர்ச்சி முக்கியம் என்றும், தலைமை கூறினால் கேரள பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக கூட தேர்தலில் களமிறங்க தயார் என்றும் தெரிவித்தார். பாலக்காடு தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட உள்ள ஸ்ரீதரனுக்கு ஆதரவாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் லால் வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வர உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இவர்கள் எல்லாம் பேரவையில் இருந்தால் நன்றாக இருக்கும் என தான் விரும்புவதாக பிரபல நடிகர் மோகன் லால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மெட்ரோ மேன் ஸ்ரீதரனை ஆதரித்து மோகன் லால் வெளியிட்டுள்ள வீடியோ  சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  ‘ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக்கூடிய நபராக  மெட்ரோ மேன் ஸ்ரீதரன் சார் இருக்கிறார். புயல் காரணமாக சேதமடைந்த பம்பன் பாலத்தை 46 நாள்களுக்குள் கட்டியவர். எல்லோரும் சாத்தியமற்றது என்று நினைத்த கொங்கன் ரயில்வே பணிகளை சுரங்கப்பாதைகள் அமைப்பதன் மூலம் சாத்தியமாக்கிய தொலைநோக்கு பார்வையாளர். 

கொச்சி மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்கு தலைமை தாங்கியவர். திட்டமிடப்பட்ட நேரத்திற்குள் திட்டங்களை முடித்த பின்னர் மீதமுள்ள நிதியை அரசாங்கத்திற்கு திருப்பித் தரும் ஒரு சுத்தமான மனிதர். மக்களை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல ஸ்ரீதரன் சாரின் சேவை இன்னும் தேவை. எனவே ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீதரன் வெல்வதற்கு வாழ்த்துக்கள்’ எனக்கூறியுள்ளார். மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன் லால் மெட்ரோ மேன் ஸ்ரீதரனுக்கு வாழ்த்து கூறியுள்ள இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ... 

Thank you for the kind gesture and good wishes. Your contribution to the film is highly commendable. Together we can build a new Kerala.
pic.twitter.com/4004KYPjXo

— Metroman E Sreedharan (@TheMetromanS)
click me!