
மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின், இளைய மகள் விஜயலட்சுமி நடிகையாக அறிமுகமாகியுள்ள ’மாவீரன் பிள்ளை’ டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு, தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் தன் சந்தனக் கடத்தல் வீரப்பன். இவருடைய வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் வகையில் பல்வேறு சீரியல்கள், மற்றும் திரைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பரப்பை பெற்ற நிலையில், தற்போது வீரப்பனின் மகள், அப்பாவின் பெயரை சொல்லும் விதத்தில் 'மாவீரன் பிள்ளை' என்கிற படத்தில் நடித்துள்ளார்.
வீரப்பனின் இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் வித்யாராணி, மற்றும் இளைய மகள் விஜயலட்சுமி. மூத்த மகள் வித்யாராணி கடந்த ஆண்டுதான் பாஜகவில் இணைந்தார்.
இளைய மகள் விஜயலக்ஷ்மி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் பணியாற்றி வரும் நிலையில், தற்போது பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகள் எந்த அளவிற்கு முக்கியம் என்பது குறித்து, ஜாதி பிரச்னையை பேசும் பேசும் படத்தில் நடித்துள்ளார் என்பது தற்போது வெளியாகியுள்ள டீசரில் இருந்து தெரிகிறது. “மாவீரன் பிள்ளை” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பது பெற்ற நிலையில், டீசர் தற்போது வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
எங்க பொண்ணுக மேல கை வைச்சி பாரு பார்ப்போம் கிழிச்சி தொங்க விட்டுடுவாளுங்க, எல்லா சரக்கையும் அடிச்சி உடைங்கடா போன்ற வசங்கங்கள் மாஸ்.... இப்படத்தை,கேஎனார் ராஜா தயாரித்து இயக்குகிறார். விரைவில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள டீசர் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.