
சமீபத்தில் தான், 'மாஸ்டர் ' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றால் பாதிக்க பட்ட நிலையில், அவரை தொடர்ந்து 'மாஸ்டர்' பட நடிகையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டுள்ளார். அடுத்தடுத்து மாஸ்டர் பட பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கொரோனா தொற்று... இனி அதிகரிக்காது என இந்திய மக்கள் நிம்மதியடைந்த நிலையில்... கடந்த மாதம் முதலே, மீண்டும் அதிக அளவில் பரவி வருகிறது. மேலும் கடந்த மாதம் முதல் 40 வயதை கடந்த இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்... ஏப்ரல் 1 முதல், அதாவது நேற்றில் இருந்து 40 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா தொற்றால் பிரபலங்கள் முதல் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, '96 ', 'மாஸ்டர்' ஆகிய படங்களில் நடித்த நடிகை கௌரி கிஷன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். வீட்டில் தனிமையில் இருப்பதாகவும்... மருத்துவரின் அறிவுரை படி சிகிச்சை எடுத்தபின்னர் நலமாக இருப்பதாகவும் ரசிகர்களின் அன்புக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தான், மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை தொடர்ந்து 'மாஸ்டர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மற்றொரு பிரபல நடிகையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.