
பிரபல கன்னட நடிகரின் பண்ணை வீட்டில் வைத்து 10 வயது சிறுமிக்கு அங்கு வேலை செய்பவர், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு நாளும் பெண்களுக்கும், சிறார்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனை தடுக்க காவல் துறையும், பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் வேலை செய்பவரே... 10 வயது சிறுமியை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், கடந்த திங்கள் கிழமை இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருந்தாலும், தற்போது தான் வெளியே கசிய துவங்கியுள்ளது. பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தான் இந்த கொடூரம் நடந்துள்ளது.
நடிகர் தர்ஷனின் பண்ணை வீட்டில் குதிரைகளை கவனித்து வந்த ஒரு தொழிலாளி, அதே பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த சிவமோகாவைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கதறியபடி கூறவே, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் அந்த குதிரைகளை கவனித்து வந்த தொழிலாளியை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.