வளர்த்த கடா மார்பில் பாய்கிறதா..? பெத்த அம்மா, அப்பாவுக்கு எதிராக நடிகர் விஜய் செய்த காரியம்…!

Published : Sep 19, 2021, 07:54 AM IST
வளர்த்த கடா மார்பில் பாய்கிறதா..? பெத்த அம்மா, அப்பாவுக்கு எதிராக நடிகர் விஜய் செய்த காரியம்…!

சுருக்கம்

தமது தாய், தந்தைக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் உண்டு பண்ணியிருக்கிறது.

சென்னை:  தமது தாய், தந்தைக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் உண்டு பண்ணியிருக்கிறது.

தமிழ் திரையுலகில் தமக்கு ஒரு இடம் பிடித்து இருப்பவர் நடிகர் விஜய். முன்னணி நடிகரான இவரது படங்கள் அதிக லாபத்தை ஈட்டி தருவது திரையுலகில் தெரிந்த ஒன்று. இப்போது பீஸ்ட் படத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் விஜய்.

இந் நிலையில் தனது தாய் ஷோபா, தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக சென்னை சிவில் நீதிமன்றத்தில் அவர் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். தனது பெயர், ரசிகர் மன்றத்தில் பெயரை பயன்படுத்துவதை எதிர்த்து அவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளன. தமது பெற்றோர் கூட தமது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று நடிகர் விஜய் வழக்கு தொடுத்திருப்பது ரசிகர்களை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த திரையுலகத்தையும் பரபரப்பாக்கி இருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மதுரையில் இருந்து சிம்புவின் அரசன் மாநாட்டை தொடங்கும் வெற்றிமாறன்: எப்போது ஸ்டார்ட் தெரியுமா?
எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணுவோம் என்று கூறும் இயக்குனர்; சூர்யாவின் 47வது பட விழா பூஜை!