வித்யாசமான உடையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஷில்பா ஷெட்டி... புடவையின் விலை எவ்வளவு தெரியுமா?

By Kanmani P  |  First Published Sep 2, 2022, 4:03 PM IST

இதில் ஷில்பா அணிந்துள்ள உடையின் விலை கிட்டத்தட்ட ரூ.47 ஆயிரம் என கூறப்படுகிறது.


பாலிவுட் திரையுலகில் மிகவும் அறியப்பட்ட நடிகையாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி.  மிஸ்டர் ரோமியோ படம் மூலம் தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி படத்தில் விஜய்யுடன் இணைந்து அசத்தி இருந்தார் ஷில்பா.

ஆனால்  இரு படங்களை தவிர தமிழில் பெரிதாக தோன்றாத இவர் பாலிவுட்டில் [முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இதற்கிடையே  கடந்த 2009-ம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் சேட்டுக்கொண்டார். பின்னர் சினிமாவில் தோன்றுவதை குறைத்து கொண்டு பிசினஸில் அதிக கவனம் செலுத்த துவங்கினார். மேலும்  ஐபிஎல்-லில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குதாரராகவும் இவர்கள் இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...சிவாஜியின் சிலை அருகே மின் விளக்கு அமைந்த மாநகராட்சி..நேரில் சென்று பாராட்டிய பிரபு

சமீபத்தில் மாடல்களை ஆபாசமாக படம் எடுப்பதாக ஷில்பாவின் கணவர் மீது புகார் எழுந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதனால் ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ் குந்த்ராவை விவாகரத்து செய்யவுள்ளார் என்கிற வதந்திகள்  வந்தது.இது குறித்து நடிகையின் தரப்பில் இருந்துஎந்த பதிலும் அளிக்கவில்லை.

தங்கமாய் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே..சல்வாரில் கியூட் போட்டோஸ் இதோ !
இந்நிலையில் .ஷில்பா ஷெட்டி தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் விநாயக சதுர்த்தியை கொண்டாடியுள்ளார். மும்பையில் உள்ள தனது வீட்டில் நடைபெற்ற கொண்டாட்ட வீடியோக்களை பகிர்ந்துள்ளார்  ஷில்பா. அந்த காணொளியில், பெல்ட் லெஹேரியா வகை புடவை அணிந்திருந்தார். அதே ஸ்டைலில் தன மகளுக்கும் உடை அணுவித்து இருந்தனர். மேலும் அவரது கணவர் மற்றும் மகனும் பாரம்பரிய உடையில் காட்சியளித்தனர். இதில் ஷில்பா அணிந்துள்ள உடையின் விலை கிட்டத்தட்ட ரூ.47 ஆயிரம் என கூறப்படுகிறது.

 

 

click me!