நான் எப்போதுமே மோடி ஆதரவாளர் தான்... அதுக்கு ஒரு காரணம் இருக்கு - ஓப்பனாக பேசிய சமந்தா.. வைரலாகும் வீடியோ

By Ganesh A  |  First Published Sep 2, 2022, 2:24 PM IST

Samantha : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தான் மோடியின் ஆதரவாளர் என பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 


தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது யசோதா, சகுந்தலம், குஷி, அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தற்போது குஷி என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.

குஷி படத்தை ஷிவ நிர்வாணா இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய உள்ளனர். இதுதவிர இந்தியில் வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார் சமந்தா.

Tap to resize

Latest Videos

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் சமந்தா சமீப காலமாக ஒரு சில பட வாய்ப்புகளை இழக்கவும் செய்துள்ளார். இதற்கு காரணம் அவர் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியது தான் என கூறப்படுகிறது. அதன்படி கடந்த ஒரே மாதத்தில் தமிழில் ஒரு படத்தில் இருந்தும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க இருந்த படத்தில் இருந்தும் விலகியுள்ளார் சமந்தா.

இதையும் படியுங்கள்... ரோப் இல்லாமல், டூப் இல்லாமல் நடிகர் கிஷோரிடம் சண்டை போட்ட குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம்!

இந்நிலையில், நடிகை சமந்தா தான் மோடியின் ஆதரவாளர் என பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஒரு பேட்டியில் பேசுகையில், தான் எப்பொழுதுமே மோடி ஜி அவர்களின் ஆதரவாளர் என கூறியுள்ள சமந்தா, அவரின் செயல்பாடுகள் தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Just another Reason to Love 😻😻 pic.twitter.com/ZjdTRVlR2n

— Amit Kumar (@AMIT_GUJJU)

மற்றொரு பேட்டியிலும் தான் மோடியின் ஆதரவாளர் என பேசியுள்ள சமந்தா, அவர் தலைமையில் நாடு பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளதாக கூறியிருப்பதோடு, அவர் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் நாட்டை முன்னோக்கி நகர்த்திச் செல்வார் என நம்புவதாகவும் அந்த பேட்டியில் சமந்தா தெரிவித்துள்ளார். இவ்வாறு ஓப்பனாக பேசிய சமாந்தாவுக்கு ஒரு பக்கம் பாரட்டுக்கள் கிடைத்தாலும், மறுபக்கம் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதையும் படியுங்கள்... சுடசுட வந்த வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்... தளபதியின் தர லோக்கல் சாங் எப்போ ரிலீஸ் தெரியுமா?

click me!