உதவி இயக்குனராக பணியாற்றும் தனது நண்பன் ஒருவர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக, நடிகர் சாந்தனு டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னனாகவும், முன்னணி இயக்குனராகவும் வலம் வந்தவர் பாக்யராஜ். இவரது மகன் ஷாந்தனுவும் தற்போது சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது இராவண கோட்டம் படத்தில் நடித்து வரும் இவர், தன் நண்பனின் மறைவு குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “நேற்று இரவு என் நண்பனை இழந்துவிட்டேன். அவன் திறமை வாய்ந்த அசிஸ்டண்ட் டைரக்டர். 26 வயசு தான் ஆகுது. அவனுக்கு எந்தவித கெட்ட பழக்கமும் கிடையாது. ஆரோக்கியமாகவே இருந்தான். ஆனால் கடவுள் அவனை நம்மிடம் இருந்து சீக்கிரம் அழைத்துக்கொண்டார். வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது திடீரென நிலைகுலைந்து விழுந்ததும் இறந்துவிட்டான்.
வாழ்க்கை மிகவும் நிச்சயமற்ற, நியாயமற்ற ஒன்று. அவன் உயிரை காப்பாற்ற சிறிது நேரம் கூட கிடைக்கவில்லை. கீழே விழுந்த சில நிமிடங்களில் அவன் உயிர் பிரிந்தது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், அவர் இறப்பதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னர் தான் எனக்கு போன் செய்துள்ளான். நான் அந்த போனை எடுக்கவில்லை.
இதையும் படியுங்கள்.... நடிகரும், இயக்குனருமான ஈ ராமதாஸ் மாரடைப்பால் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி
Life’s very uncertain…Life’s very unfair… He wasn’t even given a time window to save himself… just dropped & sailed away in a few minutes…the worst part is he called me 1hr before his demise & I couldn’t attend it…Wish I could have picked up his phone 2/4
— ஷாந்தனு (@imKBRshanthnu)நம் வாழ்வின் அடுத்த நொடி நிச்சயமற்றது என்பதால் நாம் அனைவரும் ஈகோ, வெறுப்பு ஆகியவற்றை மறந்து விட்டு, மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்போம். வெறுப்பை காட்டுவதற்கு பதிலாக பிறரை சந்தோஷப்படுத்த முயற்சிப்போம். இன்றைய உலகின் மிகப் பெரிய சாபக்கேடாக உள்ள மன அழுத்தத்தைத் தவிர்க்க முயற்சிப்போம்.
ஏதேனும் வலி உடனோ, மன அழுத்தத்துடனோ இருக்கும் போது தனியாக இருக்காதீர்கள், யாருடனாவது அதனை பற்றி பேசுங்கள். ராமகிருஷ்ணா என்னிடம் அடிக்கடி சொல்வது என்னவென்றால், ‘என்ன சார் இருக்கு இந்த உலகத்துல... அவ்ளோ நெகடிவிட்டு, வெறுப்பு... சந்தோஷமாக இருப்போம், அன்பை பரப்புவோம். அதற்கு எந்த செலவும் ஆகாது’ என கூறுவான். என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஷாந்தனு,
Talk to someone if ur going thru something, Don’t let urself go through that pain & stress alone… it will eat U…
“Enna sir iruku Indha ulagathle…avlo negativity,hatred..be Happy, Spread Love, It costs NOTHING”…-that’s what told me often😢🙏🏻 pic.twitter.com/tcPB5qOy0c
இதையும் படியுங்கள்.... இளம் நடிகர் சுதீர் வர்மாவின் தற்கொலைக்கு காரணம் என்ன? விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்