குவியும் பட வாய்ப்பு... கொட்டும் பணம்! பீச் ஹவுஸை தொடர்ந்து ரெஸ்ட்டாரெண்ட் துவங்கும் பிரியா பவானி ஷங்கர்!

Published : Jan 23, 2023, 03:09 PM IST
குவியும் பட வாய்ப்பு... கொட்டும் பணம்! பீச் ஹவுஸை தொடர்ந்து ரெஸ்ட்டாரெண்ட் துவங்கும் பிரியா பவானி ஷங்கர்!

சுருக்கம்

நடிகை பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் தான் கோடி கணக்கில் செலவு செய்து, கடற்கரையை ஒட்டிய வீடு ஒன்றை வாங்கிய நிலையில், இதை தொடர்ந்து ரெஸ்டாரெண்ட் துவங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவரே வீடியோ வெளியிட்டு தெரிவிக்க ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சின்ன திரையில் இருந்து வெள்ளித்துறைக்குள் நுழைந்த ஹீரோயினாக வெற்றி பெறும் நடிகைகள் ஒரு சிலரே... அந்த அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்றவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ' கல்யாண முதல் காதல் வரை' சீரியல் மூலம் பட்டி எங்கும் பிரபலமான இவர்... வெள்ளித்திரை வாய்ப்பு கிடைக்கவே இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

2017 ஆம் ஆண்டு இயக்குனர் ரத்தகுமார் இயக்கத்தில் வெளியான 'மேயாத மான்' திரைப்படத்தில் நடிகர் வைபவுக்கு ஜோடியாக நடித்தார் பிரியா பவானி ஷங்கர். இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருந்தார். ப்ரியா பவானி ஷங்கரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து முழு நேர வெள்ளித்திரை நடிகையாக மாறினார்.

கதாநாயகி ஆனதும் கூடிய அழகு... இளசுகளை கவர்ந்திழுக்கும் குட்டி நயன் அனிகாவின் அசத்தல் போட்டோஸ்!

'மேயாத மான்' படத்தை தொடர்ந்து ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான. மாஃயா, கடைக்குட்டி சிங்கம், ஓ மணப்பெண்ணே, கசடதபற, ஹாஸ்டல், போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவே, தற்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வங்கியில் கடைசியாக தனுஷுடன் நடித்த திருச்சிற்றம்பலம், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த, 'யானை' போன்ற படங்கள் ஹிட் லிஸ்டில் இவரை இணைத்தது.

யார் இந்த அசீம்?... ரெட் கார்டு வாங்கியவர் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனது எப்படி? - அவர் கடந்து வந்த பாதை

பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், சம்பளத்தையும் தாறுமாறாக ஏற்றியுள்ளார் ப்ரியா பவானி ஷங்கர். மேலும் தற்போது சுமார் இவரின் கை வசம் அரைடஜன் படங்கள் உள்ளன. அந்த வகையில், சிம்புவுக்கு ஜோடியாக பத்து தல,  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2, ஜெயம் ரவிக்கு ஜோடியாக அகிலன், ராகவா லாரன்ஸ் ஜோடியாக ருத்ரன், அருள்நிதிக்கு ஜோடியாக டிமான்டி காலனி ,போன்ற படங்களில் நடித்து வருகிறார். தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

செதுக்கி வைத்த சிலை போல்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு... ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் அசர வைத்த மாளவிகா மோகனன்!

பட வாய்ப்புகள் குவிந்து வருவதாலும், பணம் கொட்டோகொட்டுனு கொட்டுவதாலும், ஆசை பட்டத்தை எல்லாம் நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர், பீச் ஹவுஸ் வாங்கியதை, காதலருடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்த ப்ரியா பவானி ஷங்கர், இதை தொடர்ந்து... ரெஸ்டாரெண்ட் ஒன்றை துவங்க உள்ளதாக வீடியோ மூலம் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?