
ஜி5 தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் அண்ணா சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் முன்னணி ரோலில் நடித்து வருகிறார். அதுவும் டூயல் ரோலில் நடித்து வருகிறார். நாள்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு அண்ணா சீரியல் ஜீ5 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இன்றைய எபிடோசில் என்னநடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். இதில், பாக்கியத்திற்கு வீராவிற்கும், சிவபாலனுக்கும் திருமணம் செய்து வைக்க ஆசை. ஆனால் அது சண்முகத்திற்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே பாக்கியத்தின் மகன் வேறு இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று வேறு சொல்லிவிட்டார்.
மேலும் சண்முகத்திடம் நீ எப்போது என்னுடைய மகனிடம் பேசுன என்று கேட்கும் போது சண்முகம் எல்லா உண்மைகளையும் சொல்கிறார். அதன் பிறகும் கூட பாக்கியம் வீராவிற்கு சிவபாலன் தான் மாப்பிள்ளை என்பதி விடாப்பிடியாக இருக்கிறார். இவர்களுக்கு இடையில் இப்படி வாக்குவாதம் நடைபெறும் நிலையில் இதையெல்லாம் ஓரமாக நின்று வையெந்தி மற்றும் கௌதம் இருவரும் வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை
மேலும் அவர்கள் பாக்கியத்தை அவமானப்படுத்தவே திட்டமிட்டு இந்த கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு வந்த சண்முகம், நீங்கள் அனைவரும் சிவபாலனுக்கு ஆதரவாக இருக்கும் போது நான் என்னுடைய தங்கைக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துதருவேன். இது ஒருபுறம் இருக்க சௌந்தரபாண்டி வீராவோ தனக்கு மருமகளா வந்து விடக் கூடாது என்று பதற்றமடைகிறார். இந்த சூழலில் வைகுண்டம் மற்றும் வீரா இருவரும் பாக்கியத்தை சந்திக்கின்றனர். அப்போது பாக்கியம் தனது கோபம் எல்லாம் தணிந்து வீராவிற்கு திருநீறு பூசி விடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.