ஷங்கர் - ராம் சரண் படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்..! வெளியான அதிகார பூர்வ அறிவிப்பு!

By manimegalai aFirst Published Jul 19, 2021, 1:53 PM IST
Highlights

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்க உள்ள படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், தாற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்க உள்ள படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், தாற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்: சூர்யா பட இசையமைப்பாளர் மரணம்..!
 

இயக்குனர் ஷங்கர் தமிழில் நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கி வந்த 'இந்தியன் 2 ' திரைப்படம், இன்னும் முழுமையாக முடிக்கப்படாத நிலையில், இயக்குனர் ஷங்கர் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இம்முறை தமிழ் பட ஹீரோக்களை வைத்து படம் இயக்காமல், தெலுங்கு பட நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த தகவலை ஏற்கனவே உறுதி செய்த படக்குழுவினர். சமீபத்தில் கூட படம் குறித்து ஆலோசனை செய்ய ராம் சரண் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் சென்னையில் உள்ள இயக்குனர் ஷங்கரின் வீட்டுக்கு வந்தனர். அப்போது ஷங்கர் குடும்பத்தினர் அன்புடன் வரவேற்று.... விருது வைத்ததாக ராம் சரண் தெரிவித்திருந்தார். மேலும் மூவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

மேலும் செய்திகள்: அல்ட்ரா மாடர்ன் உடையில்... காதலரோடு மும்பையில் வலம் வரும் ஸ்ருதிஹாசன்..! ரீசென்ட் போட்டோஸ்..!
 

மேலும் தாற்போது ராம் சரண் நடித்து வந்த ஆச்சார்யா, மற்றும் RRR படங்கள் இறுதி கட்டத்தில் உள்ளதால் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பாக்கப்படும் நிலையில், தாற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. ராம் சரணின் 15 ஆவது படமாக உருவாகும் இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது படக்குழு. மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

It gets bigger and better as Music Sensation joins

Here’s a sneak peek into the first recording by Thaman and a team of 135 musicians who left and mesmerized. pic.twitter.com/NWbrSd90eF

— Sri Venkateswara Creations (@SVC_official)

 

click me!