
பஞ்சாபி பாடகரான ஹானி சிங்... பஞ்சாபி படங்கள், பாலிவுட் படங்கள் மற்றும் ஆல்பங்களில் பல ராப் பாடல்களை பாடி பிரபலமானவர். பாடகர் என்பதை தாண்டி, சில படங்களில் நடித்தும் உள்ளார். தமிழ் மொழியிலும் சில ராப் பாடங்களை பாடியுள்ளார். இந்நிலையில் இவர் மீது அவரது மனைவி, அடுக்கடுக்காக கூறியுள்ள புகார் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பாலிவுட் திரையுலகில் ஒரு புறம், ஆபாச பட வழக்கு சர்ச்சை பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், ஹனி சிங் பல பெண்களோடு, தொடர்பு வைத்து கொண்டுள்ளதாக இவரது மனைவி ஷாலினி... பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். ஹனி சிங்கிற்கும் - ஷாலினி தல்வாருக்கும் கடந்த 2011-இல் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின், தன்னுடைய கணவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொடர்ந்து, தன்னை துன்புறுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் சில பெண்களுடன் தவறான தொடர்பில் உள்ளதாகவும், இது குறித்து கேட்டதால் தன்னை கடுமையாக தாக்கியதாகவும் கூறியுள்ளார். அதே போல், போதை பழக்கத்திற்கு அடிமையாகி பஞ்சாபி நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் தன்னுடைய புகாரில் கூறியுள்ளார். மேலும் இது குறித்து டெல்லி குடும்ப நல நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள ஷாலினி ரூ.10 கோடி கேட்டு முறையிட்டுள்ளார்.
இது தொடர்பாக... யோ யோ ஹனி சிங்கிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி, உள்ள நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை இந்த மாதம், 28 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. விசாரணையின் போது யோ யோ சிங் தன்னுடைய தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்து கூறுவார் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தற்போது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.