
பாலிவுட் திரை உலகின் கிங்காங்... நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாக்கி உள்ள திரைப்படம் 'பதான்'. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்கான் நடித்துள்ள இந்த படத்தில்... அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம், ஸ்டைலிஷ் வில்லனாக நடித்துள்ளார். பாலிவுட் திரை உலகில் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் ஷாருக்கானின், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.
பான் இந்தியா திரைப்படமாக, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளில் இப்படம் உருவாகி உள்ள நிலையில், இப்படத்தின் தமிழ் ட்ரைலரை கோலிவுட் திரையுலகின் டாப் நடிகரான தளபதி விஜய் வெளியிட்டார். பொதுவாக தன்னுடைய படங்கள் மற்றும் டீசரை கூட விஜய், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடாத நிலையில், 'பதான்' படத்தின் ட்ரைலரை வெளியிட்டது ஆச்சரியமாகவே பார்க்கப்பட்டது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஷாருக்கான் தன்னுடைய ட்விட்டர் மூலம் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, "இதனால் தான் நீங்கள் தளபதி, கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம்" லவ் யூ என கூறியுள்ளார். இந்த பதிவை தளபதியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
விபத்தில் சிக்கிய 'இனியா' சீரியல் நடிகை ஆல்யா மானசா! கால் எலும்பு முறிந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள 'பதான்' படத்தின் ட்ரைலர்... ஹாலிவுட் படங்களின் தரத்தில் உருவாக்கி உள்ளது, ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. மேலும் தீபிகா படுகோன், அளவு கடந்த கவர்ச்சி காட்டியது மட்டுமின்றி, ஆக்சன் காட்சிகளிலும் ரசிகர்களை மிரள வைத்துள்ளார். ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்து.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.