Big Breaking: போதை பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு ஜாமீன்..!

By manimegalai aFirst Published Oct 28, 2021, 5:15 PM IST
Highlights

சொகுசு கப்பலில் போதை மருந்து பார்ட்டி கொண்டாடியதாக கைது செய்யப்பட்டுள்ள ஷாருகானின் (Shah rukh khan) மகன், ஆரியன் கான் (Aryan khan) வழக்கை இன்று மும்பை உயர் நீதிமன்றம் விசாரணை செய்த நிலையில், 3 வாரங்களுக்கு பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

சொகுசு கப்பலில் போதை மருந்து பார்ட்டி கொண்டாடியதாக கைது செய்யப்பட்டுள்ள ஷாருகானின் (Shah rukh khan) மகன், ஆரியன் கான் (Aryan khan) வழக்கை இன்று மும்பை உயர் நீதிமன்றம் விசாரணை செய்த நிலையில், 3 வாரங்களுக்கு பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்: 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து வெளியேறிய ரோஷ்னி..? வைரலாகும் புதிய கண்ணம்மாவின் புகைப்படங்கள்.!

பாலிவுட் நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யன் கான், மும்பையில் இருந்து கோவா சென்ற கப்பலில் நண்பர்களுடன் போதை பொருள் பார்ட்டி கொண்டாடியதாக, அக்டோபர் 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த NCB அதிகாரிகளிடம் ஆர்யன் கான் கடந்த சில வருடங்களாகவே போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார். எனினும் கப்பலில் இவரிடம் இருந்து எந்த போதை பொருளும் கைப்பற்றப்பட்ட வில்லை.

மாறாக இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட சிலரிடம் இருந்து இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்ற பட்டது. தீவிர விசாரணைக்கு பின்னர், அக்டோபர் 8 ஆம் தேதி மும்பையில் உள்ள ஆதார் சாலை சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கானுக்கு பல முறை ஜாமீன் கேட்டு, அவர் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்ட போதும், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும் செய்திகள் : மகள் திருமணத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பதில் இதற்க்கு செலவிடுங்கள்..! கவனத்தை ஈர்த்த சமந்தா..!

 

மகன் ஆர்யன் கானை எப்படியும் வெளியே கொண்டு வர ஷாருகான் குடும்பத்தினர் துடித்து கொண்டிருந்த நிலையில், ஷாருகான் தன்னுடைய பட வேலைகள் உள்ளிட்ட அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, சிறையில் இருக்கும் மகனை வெளியே கொண்டுவர முடியவில்லை என்கிற மன அழுத்தத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கினார். இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கேட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று அக்டோபர் 28 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜாமீன் குறித்த நிபந்தனைகள் நாளை அறிவிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 

click me!