
சினி பிரபலங்கள் போலவே சீரியலின் மூலம் காதலில் விழும் ரியல் ஜோடிகளின் திருமண புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகத்தான் செய்கிறது.
சமீபத்தில் செம்பருத்தி சீரியலில் நாயகியாக நடித்துவரும் ஷபானா, பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களை தொடர்ந்து ரேஷ்மா மதன் இருவரின் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நிச்சயதார்த்தம், அடுத்து திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி என தொடர்ந்து இரண்டு நாட்கள் நடந்தது. இந்த சீரியல் ரியல் ஜோடிகளின் திருமண வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தியே ஆக்கிரமித்து வந்தது.
இதற்கிடையே கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சீரியல் திருமணம் நடிகர்களான சித்து-ஷ்ரேயா இருவரும் திருமண கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த சீரியலில் மூலமாக காதலில் விழுந்த இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். முதல் சீரியல் இந்த அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றனர். இதை தொடர்ந்து விஜய் டீவியில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி 2-வில் சித்து நாயகனாக நடித்து சீரியல் பிரியர்களின் மனதை கொள்ளையடித்தது வருகிறார். இந்த இதற்கிடையே சித்து-ஷ்ரேயா திருமணம் குறித்த கேள்விகளை ரசிகர்கள் அடிக்கடி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இவர்கள் Pre Wedding கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டுள்ள சித்து-ஷ்ரேயா தங்களுடைய திருமணம் குறித்த வீடியோக்களை போஸ்ட் செய்யும் யூடுயூப் சேனல் குறித்து அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.