
தமிழில் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, பல்வேறு போராட்டங்களை கடந்து கதாநாயகன் என்கிற இடத்தை பிடித்துள்ளவர் விமல். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ’பசங்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கிராமத்து கதையம்சம் கொண்ட, 'களவாணி'. சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து தூங்காநகரம், கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து, தமிழ் சினிமாவில் நிலையான கதாநாயகனாவும் இடம் பிடித்துவிட்டார்.
சண்டக்காரி, எங்க பாட்டன் சொத்து, குலசாமி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள விமல், தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகி உள்ளார். பெயரிடப்படாத இப்படத்தை உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கும் இப்படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பாண்டியராஜன் விமலின் தந்தையாக நடிக்கிறார், சகோதரியாக பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் நடிக்கிறார். தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் ஒரு அண்ணனின் வாழ்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆடுகளம் நரேன், பாலசரவணன், தீபா, நேகா ஜா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கமில் ஜே அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு காட்வின் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.