ஜெயஸ்ரீ செய்த இந்த விஷயத்தை சகித்து கொள்ளவே முடியாது..? அவரின் நோக்கம் இது மட்டுமே..! பகீர் கிளப்பும் சீரியல் நடிகர் ஈஸ்வர்..!

Published : Dec 04, 2019, 04:37 PM IST
ஜெயஸ்ரீ செய்த இந்த விஷயத்தை சகித்து கொள்ளவே முடியாது..? அவரின் நோக்கம் இது மட்டுமே..! பகீர் கிளப்பும் சீரியல் நடிகர் ஈஸ்வர்..!

சுருக்கம்

சீரியல் நடிகர் ஈஸ்வர் மீது, அவருடைய மனைவி ஜெயஸ்ரீ கள்ளக்காதல், மற்றும் தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக கூறி, போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து, ஈஸ்வர் மற்றும் அவருடைய அம்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

தற்போது ஈஸ்வர் மற்றும் அவருடைய அம்மா என இருவருமே, பெயிலில் வெளிவந்துள்ள நிலையில் முதல் வேலையாக நடிகர் ஈஸ்வர், செய்தியாளர்களை சந்தித்து மனைவி ஜெயஸ்ரீயின் புகார் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

குறிப்பாக, ஜெயஸ்ரீ குழந்தையை வைத்து கொண்டு பேட்டி கொடுத்துள்ளதை சகித்து கொள்ள முடியாத குற்றம் என்றும், குழந்தைக்கு கடந்த வாரம் முதல், தேவையான அணைத்து வேலைகளையும் செய்து கொடுத்த நான் எப்படி, இப்படி செய்திருக்க முடியும் என மன வேதனையோடு பேசினார்.

மேலும் ஜெயஸ்ரீயின் நோக்கம் பணம் மட்டும் தான் என்றும், என்னுடைய அனைத்து பொருட்களும் அவரிடம் தான் உள்ளது. தற்போது நான் வந்திருப்பது கூட தந்தையின் கார் என்றும், தன்னிடம் இருந்து பணம் பார்ப்பதற்காகவே ஜெயஸ்ரீ இப்படி செய்வதாக கூறியுள்ளார். அதே போல் செய்தியாளர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் ஈஸ்வர் தன்னுடைய பக்கம் இருந்த நியாயத்தை எடுத்து கூறினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?