
நான் ஒரு கிறித்தவர், முதலியார் சமூகத்தைச் சேர்ந்த சோபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தன் குடும்ப விவரங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். புத்தக வெளியீட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் முதன் முறையாக இவ்வாறு பேசியுள்ளார்.
சென்னை தியாகராயநகர் வாணி மஹாலில் நடிகர் ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன், மற்றும் அவரின் தாய் வரலட்சுமி ஆகியோர் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நடிகர் பிரபு, நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு சிறப்பித்தனர்.
அந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ சந்திரசேகர், ஆரம்பகால கட்டத்தில் மிகவும் கடினப்பட்டு சினிமாவுக்கு வந்ததாக தெரிவித்தார். சொந்த ஊரிலிருந்து டிக்கெட் எடுக்காமல் சென்னைக்கு ரயில் ஏறி வந்ததாக கூறிய அவர், சென்னையில் தங்குவதற்கு இடம் கொடுத்த நீலகண்டன் என்பவரது மகளான சோபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.
அதே நேரத்தில் தான் ஒரு கிறிஸ்தவர் என்றும் தனது மனைவியை முதலியார் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மேடையில் பகிரங்கமாக குறிப்பிட்டார். அத்தோடு இல்லாமல் ஜெயம் ரவியின் தந்தை மோகன் ஒரு இஸ்லாமியர் என்றும், அவரது தாய் வரலட்சுமி ஒரு இந்து பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்றும், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், தன் மகன் விஜய்யை பலரது கைகால்களில் விழுந்து லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் சேர்த்ததாகவும், ஆனால் அவர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு நடிக்க வந்து விட்டார் எனவும் தெரிவித்தார். அவரின் பேச்சு அங்கிருந்த பவரை ஆச்சரியப்பட வைத்தது, இளையதளபதி விஜயின் தந்தையா இப்படி பேசுகிறார் என்ன வாயடைக்க வைத்தது.
அப்போது மேடையில் பாக்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் இருந்தனர் எனவே தன் பழைய நினைவுகளை அவர் உற்சாகமாக பேசினார். பாஜக உள்ளிட்ட பல இந்து அமைப்புகள் எஸ்.ஏ. சந்திரசேகரும் அவரது மகனும் நடிகருமான விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் என கூறி அரசியல் பேசி வரும் நிலையில் , தான் ஒரு கிறித்தவர் என அவர் வெளிப்படையாக பகிரங்கமாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.