நடிகர் யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!

Published : Apr 10, 2021, 02:42 PM IST
நடிகர் யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராகவும்,  காமெடி ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் யோகிபாபு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மண்டேலா' திரைப்படத்தில் முடி திருத்துவோரை, அவமதிக்கும் வகையில் சில காட்சிகள் உள்ளதாக தற்போது கமிஷனர் அலுவலகத்தில் யோகிபாபு மாற்று படக்குழுவினர் மீது  பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராகவும்,  காமெடி ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் யோகிபாபு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மண்டேலா' திரைப்படத்தில் முடி திருத்துவோரை, அவமதிக்கும் வகையில் சில காட்சிகள் உள்ளதாக தற்போது கமிஷனர் அலுவலகத்தில் யோகிபாபு மாற்று படக்குழுவினர் மீது  பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில்,  கடந்த வாரம் வெளியான திரைப்படம் மண்டேலா.  நேரடியாக தொலைக்காட்சியில் வெளியான இந்த படத்திற்கு  பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒருவேளை திரையரங்கில் 'மண்டேலா' திரைப்படம் வெளியாகி இருந்திருந்தால், வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்திருப்பார் மண்டேலா என விமர்சகர்கள் கூறினர். சூரங்குடி என்ற ஒரு கிராமமும் அதில் வடக்கூர் - தெற்கூர் என இரண்டு சாதிகளாகப் பிரிந்து வாழும் மக்களில ஊர் தலைவருக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.  அந்த ஊர் மக்களால் அவமதிக்கப்படும் சிகை அலங்காரம் செய்யும் நெல்சன் மண்டேலா ஓட்டுக்காக இரு ஊரு தலைவர்களும் முட்டி மோதிக்கொள்ளும் கதைதான் மண்டேலா.  இறுதியில் யாருக்கு யோகிபாபு வாக்களிக்கிறார், யார் வெற்றி பெறுகிறார் என்பதை மிகவும் சுவாரஸ்யமாக கூறியுள்ளார் இயக்குனர்.

இந்நிலையில், இந்த படத்தின் இடம்பெற்றுள்ள காட்சிகள் முடி திருத்துவோர் மனதை புண் படுத்தும் விதத்தில் உள்ளதாக, தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கத்தினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது, நடிகர் யோகிபாபு நடித்துள்ள 'மண்டேலா' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், படம் முழுவதும் இதுபோன்ற காட்சிகள் அமைந்துள்ளதால் முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வரும் நிலையில், இதே போல் யோகி பாபுவின் படத்திற்கும் புதுப்புது பிரச்சனைகள் தலை தூக்கியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!