அசல் HD அனுவபவத்தை பெற... புதிய பிரச்சாரத்தை அறிமுகப்படுத்துகிறது ஸ்டார் இந்தியா..!

By manimegalai a  |  First Published Apr 9, 2021, 3:14 PM IST

புதிய தொலைக்காட்சி விளம்பரம், ‘காண்பிப்பதில் மட்டுமில்லை.. பார்ப்பதிலும் அசல் ஹெச்டி அனுபவம் இருக்கிறது’,  என்று பொருள்படும் வகையில் ஸ்டார் இந்தியா நெட்வொர்க்கில், 7 பிராந்திய மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.
 


புதிய தொலைக்காட்சி விளம்பரம், ‘காண்பிப்பதில் மட்டுமில்லை.. பார்ப்பதிலும் அசல் ஹெச்டி அனுபவம் இருக்கிறது’,  என்று பொருள்படும் வகையில் ஸ்டார் இந்தியா நெட்வொர்க்கில், 7 பிராந்திய மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

சென்னை, ஏப்ரல் 01, 2021: தொலைக்காட்சி ரசிகர்கள் ஹெச்டி டிவி [HD TV] வைத்திருந்தாலும், ஹெச்டி செட்-டாப் பாக்ஸ் (எஸ்.டி.பி) [HD Set-Top Box (STB)], இணைப்பு பெற்றிருந்தாலும் கூட  தங்களுக்கு பிடித்த ஸ்டார் சேனல்களை ஸ்டாண்டர்ட் டெபனிஷன்  [Standard Definition (SD)]-ல் தொடர்ந்து கண்டுகளிப்பவர்களிடையே ஹெச்டி-யின் அசல் அனுபவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில்  ‘காண்பிப்பதில் மட்டுமில்லை..பார்ப்பதிலும் அசல் ஹெச்டி அனுபவம் இருக்கிறது’  என்று பொருள்படும் என்ற புதிய பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஸ்டார் இந்தியா [Star India].  நாடு தழுவிய இந்த தொலைக்காட்சி பிரச்சாரம் [television campaign (TVC)] அசல் ஹெச்டி அனுபவம் குறித்த விழிப்புணர்வை தொலைக்காட்சி ரசிகர்களிடையே உருவாக்கும்.

Tap to resize

Latest Videos

ஹெச்டி டிவி [HD TV] இருந்தாலே போதும், ஹெச்டி-ல் பார்க்கும் ஒரு முழுமையான அனுபவம் கிடைக்கும் என பொய்யான கருத்து பெரும்பாலான தொலைக்காட்சி ரசிகர்களிடையே இருக்கிறது. இது ஒரு கட்டுக்கதை. இதை நகைச்சுவையுடன் எடுத்துரைக்கும் வகையில் இந்த பிரச்சாரம் அறிமுகமாகி உள்ளது.   ஸ்டார் இந்தியா’ நடத்திய ஆய்வு முடிவுகளின்படி,  ஹெச்டி டிவி மற்றும் ஹெச்டி செட்-டாப் பாக்ஸ் வைத்திருந்தாலும்,  முழுமையான ஹெச்டி பார்க்கும் அனுபவத்தைப் பெற ஹெச்டி சேனல்களை சந்தா செலுத்தி பெறவேண்டுமென்பதை வெறும்  25%* வாடிக்கையாளர்கள் மட்டுமே அறிந்திருக்கிறார்கள். என்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த புதிய பிரச்சாரம், ஸ்டார் ஹெச்டி சேனல்களின் ப்ரத்யேக அம்சங்களான  விசாலமான படம் [wider picture], 5 மடங்கு துல்லியமான திரைப்படம், மற்றும் 5.1 டால்பி சரவுண்ட் சவுண்ட்,போன்றவற்றை எடுத்துரைக்கிறது.  இந்த சிறப்பு அம்சங்கள் ஹெச்டி தொலைக்காட்சியில் ஹெச்டி சேனல்களை பார்க்கும் அனுபவத்தை மிகச் சிறப்பானதாகவும், முழுமையானதாகவும் உருவாக்க உதவுகிறது. அதாவது  ஹெச்டி-யில் பார்க்கும் உண்மையான அனுபவம் என்பது ‘காண்பிப்பதில் மட்டுமில்லை..பார்ப்பதிலும் அசல் ஹெச்டி அனுபவம் இருக்கிறது’ என்பதை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கிறது இப்பிரச்சாரம்.

ஸ்டார் & டிஸ்னி இந்தியா நிறுவனத்தின் இந்தியா மற்றும் சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சி விநியோகத் தலைவர் குர்ஜீவ் சிங் கபூர் கூறுகையில், “ஸ்டார் இந்தியாவில், எங்கள் பார்வையாளர்களுக்கு ஈடு இணையற்ற பொழுதுபோக்கு அனுபவத்தையும் மதிப்பையும் வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து அக்கறையுடன், கவனம் செலுத்தி வருகிறோம். பல்வேறு வகைகளிலான நிகழ்ச்சிகள் மற்றும் மொழிகளில் 26 ஸ்டார் ஹெச்டி சேனல்களின் மூலம் எங்களது நிகழ்ச்சிகள் மற்றும் படைப்புகளின் மீது வாடிக்கையாளர்களின் கவனத்தை இன்னும் அதிகம் ஈர்க்கமுடியும்.  இந்த ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு இருக்கின்றன. அதேபோல்   விவோ ஐபிஎல் 2021 போட்டிகள் நெருங்கி வருகின்றன.  அதனால் எங்களது வாடிக்கையாளர்கள் ஸ்டேடியத்தில் இருப்பது போன்ற அசல் உணர்வை, அனுபவத்தை பெற ஹெச்டி சேனல்களின் அந்த உண்மையான அனுபவத்தை கொண்டாட விரும்புகிறோம். ஸ்டார் ஹெச்டி சேனல்களுக்கான சந்தாவை செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைக்காட்சி பார்க்கும் அனுபவத்தை மிகச்சிறப்பானதாக மேம்படுத்த இதுவே மிகச் சரியான நேரம். எனவே, இந்த பிரச்சாரம், ஹெச்டி சேனலின் உண்மையான அனுபவம் குறித்த விழிப்புணர்வு இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்டார் ஹெச்டி சேனல்களை ரீசார்ஜ் செய்யவேண்டியதன் அவசியத்தையும் உணர வைக்க உதவுகிறது.’’ என்றார்.

இப்பிரச்சாரமானது விழிப்புணர்வுக் கருத்தை மிக ஆழகாக, அனைவருக்கும் புரியும் வகையில் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக மக்கள் தங்களது வீடுகளில் எந்த உபயோகத்திற்காக அந்த பொருட்களை வாங்கினார்களோ அதற்காக பயன்படுத்தாமல், தங்களது சமூக மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக மட்டுமே வைத்திருப்பதை மிக அழகாக காட்டியிருக்கிறது. வீடுகளில் நவீன, ஆடம்பர ப்ளாட் ஸ்கிரீன் ஹெச்டி டிவியை சொந்தமாக வைத்திருப்பது என்பது மக்களின் சமூக அந்தஸ்தை உயர்த்திக்காட்டுவதற்காக  மட்டுமே என்பது போன்று இருப்பதையும், ஸ்டார் ஹெச்டி சேனல்களை சந்தா செலுத்தி பெறுவதன் மூலம் ஹெச்டி டிவிக்கான மதிப்பை கொண்டாடுவதையும்  இந்த பிரச்சாரம் காட்டுகிறது. அசல் ஹெச்டி அனுபவத்தை பரிந்துரைக்கும் வகையில் ஸ்டார் இந்தியா நெட்வொர்க்கின் அதிகம் விரும்பப்படும் சில கதாபாத்திரங்களும் இந்த பிரச்சாரத்தில் இடம்பெறுகின்றன..

10,0000-க்கும் மேற்பட்ட, சந்தா செலுத்தி டிவி சேனல்களை பார்க்கும் வீடுகளில் டிவி சேனல்களின் பேக்-ஐ சந்தா செய்வதை முடிவு செய்பவர்களிடம், 2019-ம் ஆண்டு 69 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதோ... 


 

click me!