இசை ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் அறிவித்த ஸ்பெஷல் போட்டி... விவரங்கள் உள்ளே...!

manimegalai a   | Asianet News
Published : Apr 08, 2021, 08:01 PM IST
இசை ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் அறிவித்த ஸ்பெஷல் போட்டி... விவரங்கள் உள்ளே...!

சுருக்கம்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பாடலை பதிவு செய்து, அதை யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராமில் #99SongsCoverStar எனும் ஹேஷ்டாகை பயன்படுத்தி பதிவேற்ற வேண்டும்.   

தன்னுடைய முதல் தயாரிப்பான 99 சாங்ஸ் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், பரவசமூட்டும் போட்டி ஒன்றை இசை ரசிகர்களுக்காக ஏ ஆர் ரஹ்மான் அறிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 99 சாங்ஸ் திரைப்படத்தின் பாடல்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை ரசிகர்கள் தேர்ந்தெடுத்து, அதை அவர்கள் பாடி பதிவு செய்து அனுப்பலாம் என்று கூறியுள்ளார்.

போட்டியில் பங்கேற்பவர்கள், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பாடலை பதிவு செய்து, அதை யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராமில் #99SongsCoverStar எனும் ஹேஷ்டாகை பயன்படுத்தி பதிவேற்ற வேண்டும். ரஹ்மானையும் (@arrahman) அவர்கள் டேக் செய்ய வேண்டும். பத்து வெற்றியாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மானையும், 99 சாங்ஸ் குழுவினரையும் காணொலி மூலம் சந்தித்து உரையாடும் வாய்ப்பை பெறுவார்கள். அதோடு, ஒரு வெற்றியாளருக்கு ஏ ஆர் ரஹ்மானோடு இணைந்து பணியாற்றும் மாபெரும் வாய்ப்பு வழங்கப்படும்.

இணைப்பு: https://twitter.com/arrahman/status/1379853398170726401?s=19 சமூக வலைதளங்களில் உள்ள ரசிகர்கள் மற்றும் கலைஞர்களை இந்த அறிவிப்பு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்களது பாடல் பதிவுகளை பலரும் அனுப்பி வருகின்றனர். 2021 ஏப்ரல் 16 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தியா முழுவதும் ‘99 சாங்ஸ்’ வெளியாகிறது. ஜியோ ஸ்டூடியோஸால் வெளியிடப்படவுள்ள இத்திரைப்படத்தை ஏ ஆர் ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய் எம் மூவிஸ் ஐடியல் என்டெர்டைன்மென்டுடன் இணைந்து தயாரித்துள்ளது.                                                                      
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கள்ளாகட்டிய டாப் 3 படங்கள் பட்டியல்: லேட்டஸ்ட் கோலிவுட் அப்டேட்!
2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?