50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி..! 'கர்ணன்' படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

Published : Apr 08, 2021, 04:45 PM IST
50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி..! 'கர்ணன்' படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

சுருக்கம்

நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி, அதாவது நாளை வெளியாகவுள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், 'கர்ணன்' படம் சொன்னபடி ரிலீஸாகுமா என ரசிகர்கள் மனதில் சந்தேகம் இருந்த நிலையில், 'கர்ணன்' படக்குழு அதிரடி முடிவை எடுத்துள்ளது.  

நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி, அதாவது நாளை வெளியாகவுள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், 'கர்ணன்' படம் சொன்னபடி ரிலீஸாகுமா என ரசிகர்கள் மனதில் சந்தேகம் இருந்த நிலையில், 'கர்ணன்' படக்குழு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் 'கர்ணன்'.  ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் விதமாக, இதுவரை 'கண்டா வரச்சொல்லுடா', 'பண்டாரத்தி புராணம்', மற்றும் 'திரௌபதி முத்தம்' ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதை தொடர்ந்து வெளியான இந்த படத்தின், டீசர் ஒரே நாளில் மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது.

கர்ணன் பட டீசர்... உழைக்கும் வர்கத்தின் கதை என்பது இந்த படத்தை டீசரில் இருந்த தெரிந்தது . டீசரின் துவக்கத்திலேயே, பருந்து ஒன்று கோழி குஞ்சுகளை தூக்கி செல்வது போல் காட்டப்படுகிறது. இதுவே இந்த படம் குறித்த பல யுகங்களை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது. கண்ணீர் மல்க அமர்ந்திருக்கும் மக்கள்... தனுஷ் குதிரையில் கையில் வாலுடன் கொடுக்கும் என்ட்ரி வேற லெவலில் இருந்தது. மக்களும் ஒருத்தனையும் விடாத கர்ணா... அடிச்சி துரத்து என கூறி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பிரச்சனை அதிகரித்து வருவதால், தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இதுவரை 100  சதவீத பார்வையாளர்களுடன் இயங்கி வந்த, திரையரங்குகளில், இனி 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

எனவே கர்ணன் திரைப்படம் சொன்னது போல் நாளை வெளியாகுமா என்கிற ஒரு சந்தேகம் ரசிகர்கள் மனதியில் இருந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு,  ‘கர்ணன்’ திரைப்படம் ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை திரையரங்குகளில் வெளியாகும். அரசு அறிவித்துள்ள 50 சதவீத இருக்கைகள் அனுமதி என்ற கட்டுப்பாட்டில் ‘கர்ணன்’ திரைப்படம் வெளியாகும். அதே போல் அரசு அறிவித்த அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் திரையரங்குகளில் கடைபிடிக்கப்படும். ரசிகர்கள் அனைவருக்கும் நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவெனில் அனைவரும் பாதுகாப்புடன் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து ‘கர்ணன்’ திரைப்படத்தை ரசிக்க வாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Asha Bhosle Net Worth: ரூ.250 கோடி சொத்து, வெளிநாட்டு பிசினஸ்..! ஆஷா போஸ்லேவின் வாரிசு யார்?
விஜய் தேவரகொண்டா பேசிய அந்த வார்த்தை! கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்ட ராஷ்மிகா ! என்ன நடந்தது ?