Exclusive: சைக்கிளில் வந்து ஓட்டு போட்ட விஜய்... அரசியல் நோக்கத்திலா? தந்தை எஸ்.ஏ.சி பளீச் பதில்!

Published : Apr 08, 2021, 01:03 PM IST
Exclusive: சைக்கிளில் வந்து ஓட்டு போட்ட விஜய்... அரசியல் நோக்கத்திலா? தந்தை எஸ்.ஏ.சி பளீச் பதில்!

சுருக்கம்

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், தளபதி விஜய் சைக்கிளில் வந்து, ஓட்டு போட்டது குறித்து தன்னுடைய கருத்துகளை, தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏசியாநெட் தளத்திற்கு Exclusive பேட்டி கொடுத்துள்ளார்.  

Exclusive: சைக்கிளில் வந்து ஓட்டு போட்ட விஜய்... அரசியல் நோக்கத்திலா? தந்தை எஸ்.ஏ.சி பளீச் பதில்!

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், தளபதி விஜய் சைக்கிளில் வந்து, ஓட்டு போட்டது குறித்து தன்னுடைய கருத்துகளை, தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏசியாநெட் தளத்திற்கு Exclusive பேட்டி கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய், சைக்கிளில் வந்து ஓட்டு போட்டது, அரசியல் ரீதியான கருத்தை வழுத்துருத்தத்தான் என்று சர்ச்சை எழுந்துள்ளது?

இந்த கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், " 5 வருடத்திற்கு ஒரு முறை வரும் பொது தேர்தலில், விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார் என்பது தற்போது மிகவும் வைரலாகியுள்ளது. இது போல் 5 வருடத்திற்கு ஒருமுறை வரும் பொது தேர்தலில் ஒவ்வொருவரும் எப்படி தங்களை அடையாள படுத்திக்கொள்கிறார்கள் என்பது முக்கியம். அவர் இப்படி செய்ததை நான் ஒரு பொது மக்களாக இருந்து பார்க்கும் போது, விஜய் தன்னை ஒரு நடிகனாகவோ, விஐபி -யாகவோ வெளிப்படுத்தி கொண்டு, ஓட்டு போட வேண்டும் என நினைக்காமல், ஒரு சாதாரண மனிதனாக, எல்லோரும் சமம் என நினைத்து, எல்லோரும் ஒரு இந்தியன் என்று நினைத்து... சாதாரண ஒரு தமிழனாக வந்தார். அந்த இடத்தில் அவர் தன்னை ஒரு நடிகராக அடையாள படுத்திக்கொள்ளவில்லை என்றே நான் நினைக்கிறன் என கூறினார்.

அரசியல் பிரச்சாரங்களில் பெட்ரோல், டீசல் விலை குறித்து அதிகம் பேசப்பட்டது, எனவே இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டுபோட்டாரா? 

என்கிற கேள்விக்கு... கடந்த தேர்தலில் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கை பதிவு செய்தார் விஜய். எனவே நானும் பொது மக்களில் ஒருவர் என்பதை தான் அந்த இடத்தில் அழுத்தமாக கூற விரும்புகிறார் என தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவாரா என மக்கள் பலர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனை வெளிப்படுத்தும் விதமாக சைக்கிளில் வந்தாரா விஜய், என எழுபட்ட கேள்விக்கு?

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அதில் வெற்றிபெறுவதும், தோல்வியடைவதும் மக்கள் கையில் தான் உள்ளது என பதிலளித்தார். விஜய்யை, எம்.ஜி.ஆருடன் இணைத்து தமிழக ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஓட்டுவது குறித்த கேள்விக்கு, அதனை பார்க்கும் போதும் கேட்கும் போதும் மிகவும் சந்தோஷமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?