இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கொரோனா..! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

By manimegalai aFirst Published Apr 8, 2021, 11:41 AM IST
Highlights

பழம்பெரும் இயக்குனர் எஸ் பி முத்துராமன் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகினர், மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

பழம்பெரும் இயக்குனர் எஸ் பி முத்துராமன் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகினர், மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் தன்னுடைய கொடூர முகத்தை காட்டத் துவங்கியுள்ளது கொரோனா. நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனா பாதிப்பு 4000ஐ நெருங்கியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால், ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

நேற்றையதினம் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பிறகும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக, நடிகை ராதிகா தெரிவித்ததை தொடர்ந்து,  தற்போது ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்றோருக்கு பல வெற்றி படங்களை இயக்கி, அவர்களது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான , எஸ்.பி.முத்துராமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

'கனியமுது பாப்பா' என்ற திரைப்படத்தின் மூலம் 1972 ஆம் ஆண்டு  இயக்குனராக அறிமுகமான இவர், இதை தொடர்ந்து காசியாத்திரை, அன்பு தங்கை, யாருக்கு மாப்பிள்ளை யாரோ, துணிவே துணை, பாண்டியன், குரு சிஷ்யன், உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த பல  சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இவர், தற்போது சிகிச்சைக்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்த பிரபலங்கள் , மற்றும் ரசிகர்கள் பலர் விரைவில் அவர் உடல் நலம் பெற வேண்டும் என தங்களுடைய பிரார்த்தனையை தெரிவித்து வருகின்றனர். 86 வயதாகும் இவர் சுமார் 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக ராம்கி நடிப்பில் வெளியான 'தொட்டில் குழந்தை' என்கிற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!