மிகக் குறுகிய காலத்தில், கோலிவுட், டோலிவுட், மற்றும் பாலிவுட் வரை சென்றுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ ஒன்றை அவரது முன்னாள் காதலர், ரக்ஷித் ஷெட்டி வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மிகக் குறுகிய காலத்தில், கோலிவுட், டோலிவுட், மற்றும் பாலிவுட் வரை சென்றுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ ஒன்றை அவரது முன்னாள் காதலர், ரக்ஷித் ஷெட்டி வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தன்னுடைய 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ராஷ்மிகா மந்தனா, கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'கிரிக் பார்ட்டி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இந்த படத்தில் மூலம் இருவரும் காதலிக்கவும் தொடங்கினர். திருமண நிச்சயதார்த்தம் வரை சென்ற இவர்களது காதல் திருமணம் ஆகாமலேயே நின்றது. பின்னர் இருவரும் தங்களது காதலை மறந்து நண்பர்களாக பழகி வருகின்றனர். அவ்வபோது சமூகவலைதளத்தில் இருவரும் பேசிக் கொள்வதும் வழக்கம்.
தற்போது ரஷீத் செட்டி, நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 'கிரீக் பார்ட்டி' படத்தின் ஆடிஷனில் ராஷ்மிகா நடித்து காட்டிய, பலரும் பார்த்திடாத ராஷ்மிகா மந்தனா நடிக்க வருவதற்கு முன் எடுத்து கொண்ட அரிய வீடியோவை வெளியிட்டு, தன்னுடைய திரைவாழ்க்கையில் நீ பல போராட்டங்களை கடந்து இந்த தூரத்தை அடைத்துள்ளாய்... என தன்னுடைய வாழ்த்துக்களோடு ராஷ்மிகாவின் 25வது பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழில் கடைசியாக சுல்தான் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா இதைத்தொடர்ந்து இந்தியில் 2 மெகா பட்ஜட் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இந்தியில் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் மிஷன் மஞ்சு மற்றும் அமிதாப் பச்சன் நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தெலுங்கில் மற்றும் தமிழிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போது இந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Sharing this beautiful memory of yours from the audition. You have travelled so far since then, chasing you'r dreams like a real worrier. Proud of you girl and Happy Birthday to you. May you see more success 😀🤗 pic.twitter.com/6M1rBCQnee
— Rakshit Shetty (@rakshitshetty)