‘மண்டேலா’ படத்திற்கு தடை... யோகி பாபு மீது வழக்குப்பதிவு செய்ய துடிக்கும் முடி திருத்துவோர் சங்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 9, 2021, 6:57 PM IST
Highlights

கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான மண்டேலா திரைப்படத்தில், முடிதிருத்தும் தொழில் செய்யும் மருத்துவ சமுதாய மக்களை இழிவாக சித்தரித்துள்ளததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும்  மண்டேலா திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சாமனியனின் ஒரு ஓட்டு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைத்த மண்டேலா  திரைப்படத்திற்கு சோசியல் மீடியாவில் வரவேற்பு குவிந்து வருகிறது. இதில் யோகிபாபு முடிதிருத்துவோராக நடித்திருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து முடித்திருத்துவோர் சங்கத்தை சேர்ந்தவர்கள் திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். 

நடிகர் யோகிபாபு நடித்து வெளிவந்துள்ள மண்டேலா படத்தில் தங்கள் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் வகையில் வசனங்கள் இடம்பறெ்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. எனவே இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும், மேலும் படத்தினை தயாரித்த சக்கரவர்த்தி ராமச்சந்திரன் மற்றும் இயக்குநர் முடோனி அஷ்நின் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. விஜய் டி.வி. வெளியிட்ட மண்டேலா திரைப்படத்திற்கு எதிராக தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதில், கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான மண்டேலா திரைப்படத்தில், முடிதிருத்தும் தொழில் செய்யும் மருத்துவ சமுதாய மக்களை இழிவாக சித்தரித்துள்ளததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், அந்தத் திரைப்படத்தை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனம், அதைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ், படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வின் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மண்டேலா படத்தை ஒளிபரப்ப, நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் மூலம் பொதுநல வழக்கு தொடர இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

click me!