அதிர்ச்சி... பிரபல இயக்குனர் சி.வி.சசிகுமார் மாரடைப்பால் திடீர் மரணம்..!

Published : Nov 14, 2021, 04:53 PM IST
அதிர்ச்சி... பிரபல இயக்குனர் சி.வி.சசிகுமார் மாரடைப்பால் திடீர் மரணம்..!

சுருக்கம்

செங்கோட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சி.வி.சசிகுமார் புற்றுநோயிக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

செங்கோட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சி.வி.சசிகுமார் புற்றுநோயிக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'செங்கோட்டை' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.வி.சசிகுமார். அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் நடிகை ரம்பா மற்றும் மீனா ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், விஜயகுமார், ஆனந்த ராஜ், வடிவேலு, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுதிரி தயாரித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து மற்ற எந்த படங்களையும் இவர் இயக்க வில்லை என்றாலும், பல படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். மேலும் தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'மகாபாரம்' தொடரையும் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே... ராமச்சந்திரா மருத்துவமனையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் இவர் மரணம் அடைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் அனைத்து பிரபலங்களுக்கும் மிகவும் நெருக்கமானவராக இருந்த இவரது மறைவை தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?