அட கடவுளே... தனுஷின் அண்ணனுக்கா இந்த நிலை.. அவமானப்பட்டாரா செல்வராகவன்..

Kanmani P   | Asianet News
Published : Dec 27, 2021, 02:17 PM IST
அட கடவுளே... தனுஷின் அண்ணனுக்கா இந்த நிலை.. அவமானப்பட்டாரா செல்வராகவன்..

சுருக்கம்

'அவமானத்தோடு உண்ணும் விருந்தைவிட பழையது அமிர்தம்' என இயக்குனர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கான காரணம் குறித்து பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

துள்ளுவதோ இளமை படத்தில் எழுத்தாளராக அறிமுகமான செல்வராகவன், தனது சகோதரர் தனுஷின் காதல் கொண்டேன் படத்தை  தனது முதல் படைப்பாக உருவாக்கினார்.  இதை தொடர்ந்து 10 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள செல்வராகவன் தற்போது நாயகன் பரிமாணத்தை எடுத்துள்ளார். 'ராக்கி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். சமீபத்தில் இவர் இயக்கி முடித்துள்ள படம் 'சாணிக் காயிதம்'.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன்  நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 80களில் நடப்பது போன்ற கதைக் களத்தைக் கொண்டது. இதன் வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு வருடம் கழிந்துள்ள நிலையிலும் இதன் ரிலீஸ் குறித்த எந்த தகவலும் இல்லை.

இதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் தன்னுடைய சகோதரரும், நடிகருமான தனுஷ் வைத்து  'நானே வருவேன்' என்னும் படத்தை இஐக்கி வருகிறார்.

இயக்குநர் செல்வராகவன், தனுஷ், கூட்டணி என்றாலே பலருக்கும் எதிர்பார்ப்புகள் எகிறிவிடும், இவர்களுடன் யுவன் சங்கர் ராஜாவும் இருக்கிறார் என்றால் திரையில் பட்டையைக் கிளப்பும் ட்ரீட் கன்பார்ம் என்பது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், என்.ஜி.கே வரை செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி தொட்டதெல்லாம் ஹிட்டு தான். தற்போது அந்த கூட்டணி மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.

இந்நிலையில் அவ்வப்போது சேட் போஸ்டுகளை செய்து வரும் செல்வராகவன் தற்போது ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா, அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்.என பதிவிட்டுள்ளார். 

செல்வராகவனின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வந்தாலும் செல்வராவனுக்கு என்னத்தான் ஆச்சு என்றும்.. தொடர்ந்து பிலாஷபி பேசி வருகிறாரே என்று அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அதிரடி வெற்றிகள் முதல் சர்வதேச கவனம் வரை: 2025-ல் அதிகம் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் யார் யார்?
நாட்டாமை டீச்சரின் மகளா இது? அம்மாவை தொடர்ந்து சரத்குமாருடன் நடித்த மகள்: ரசிகர்கள் அதிர்ச்சி!