Rajinikanth Foundation Website Launched: ரஜினிகாந்தின் அறக்கட்டளை துவக்கம்.. வெளியான சூப்பர் தங்கள்!

Published : Dec 27, 2021, 12:59 PM IST
Rajinikanth Foundation Website Launched: ரஜினிகாந்தின் அறக்கட்டளை துவக்கம்.. வெளியான சூப்பர் தங்கள்!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth), தன்னுடைய பிறந்தநாள் அன்று, அவர் துவங்க உள்ள புதிய அறக்கட்டளையின் இணையதளம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் இந்த, இந்த அறக்கட்டளையின் இணையதம் துவக்கம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய பிறந்தநாள் அன்று, அவர் துவங்க உள்ள புதிய அறக்கட்டளையின் இணையதளம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் இந்த, இந்த அறக்கட்டளையின் இணையதம் துவக்கம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 71 ஆவது பிறந்த நாள் அன்று, யாரும் எதிர்பாராத புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது  ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வியை மேன்படுத்தும் விதமாக டிஎன்பிசி தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு பயற்சி அளிக்க புதிய அறக்கட்டளை துவங்க உள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது இந்த அறக்கட்டளை துவங்க பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...  "இந்திய திரைத் துறையின் சூப்பர் ஸ்டார் பத்மபூஷன் ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அமைப்பதற்காக உருவாக்கப்பட்டது.

எங்களுக்கு உலகளாவிய பார்வை இருந்தாலும் எங்களது ஆரம்ப முயற்சிகளை தமிழ்நாட்டில் மட்டுமே எடுக்க விரும்புகிறோம். தமிழ்நாட்டு மக்களின் கருணையும் அன்பும் தான் தனக்கு இவ்வளவு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது என்று சூப்பர் ஸ்டார் எப்போதும் கூறுவார். எனவே இந்த அறக்கட்டளை தமிழகத்திலிருந்து தொடங்கப்படும்.

அறக்கட்டளை சிறிய ஆரம்பம், முயற்சி, சுய திருத்தம், பிறகு இதுவே இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை நம்புகிறது. தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆசியுடன், இலவச டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு பயிற்சிக்கான சூப்பர் 100 பிரிவு பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பதிவு செய்ய http://rajinikanthfoundation.or/tnpsc.html என்ற இணையதள முகவரியை பின்தொடரவும். இவ்வாறு இந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது". தலைவரின் இந்த முயற்சிக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?