வைரமுத்துக்கு வக்காலத்து வாங்கிய சீமான்... கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!

Published : Oct 15, 2018, 05:42 PM ISTUpdated : Oct 15, 2018, 05:45 PM IST
வைரமுத்துக்கு வக்காலத்து வாங்கிய சீமான்... கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!

சுருக்கம்

#ME TOO ஹேஷ் டேக் விவகாரத்தில் வைரமுத்து மீது சின்மயி கூறி இருக்கும் புகாரை பலரும் பல விதமாக விமர்சித்து வருகின்றனர். சின்மயி இடம் ஆதாரம் இருக்கிறதா? ஆதாரம் இல்லாமல் இப்படி குற்றம் சாட்டுவது தவறு.

#ME TOO ஹேஷ் டேக் விவகாரத்தில் வைரமுத்து மீது சின்மயி கூறி இருக்கும் புகாரை பலரும் பல விதமாக விமர்சித்து வருகின்றனர். சின்மயி இடம் ஆதாரம் இருக்கிறதா? ஆதாரம் இல்லாமல் இப்படி குற்றம் சாட்டுவது தவறு. இத்தனை காலம் அமைதியாக இருந்துவிட்டு இப்போது குற்றம் சுமத்துவது ஏன் என பலரும் பலவிதமாக சின்மயிக்கு எதிராக பேசி வருகின்றனர். 

அதே சமயம் சின்மயிக்கு ஆதரவாகவும் சிலர் குரல் எழுப்பி இருக்கின்றனர். இந்த விவகாரம் ஒரு பக்கம் இப்படி சூடு பிடித்துக்கொண்டிருக்கும் போதே, புதிதாக சில பெண் பிரபலங்களும் வைரமுத்து மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்திருக்கும் கருத்து தற்போது அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது. 

இந்த சம்பவம் குறித்து பேசும் போது சீமான்,”பிரபலங்களை பற்றி அநாகரீகமாக பேசுவது இப்போது நாகரீகமாகி வருகிறது, வைரமுத்து தவறு செய்திருந்தால் , அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். தவறு செய்தவர்களை தண்டிப்பதில் எந்த தவறும் இல்லை. அதே சமயம் அவர் மீது புகார் அளித்து சட்டப்படி இந்த விஷயத்தை அனுகாமல், டிவிட்டரில் அவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி இருப்பது தான், இவர்களின் நோக்கத்தை சந்தேகப்பட வைக்கிறது. என தெரிவித்திருக்கிறார். 

அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது வைரமுத்துவுக்கு ஆதரவாக அவர் பேசி இருப்பதாகவே மக்களை எண்ணம் கொள்ள செய்திருக்கிறது. இதனால் சீமானை அவர் வழியிலேயே மடக்கிப்பிடித்து கேள்வி எழுப்பி இருக்கின்றனர் நெட்டிசன்கள் அதில் “சீமான் இதற்கு முன்னர் பல அரசியல் பிரபலங்கள்குறித்தும் மேடைப்பேச்சுகளின் போது, குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருக்கிறார்.

அப்போதெல்லாம் அவர் சட்டப்படி புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காமல் மேடையில் மட்டும் தான் பேசி இருக்கிறார். அப்படி ஆனால் அவரின் இந்த மேடை பேச்சுக்களை பிற அரசியல் தலைவர்களை களங்கப்படுத்தும் நோக்கமாக நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா? என கேள்வி எழுப்பி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

1000 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் சீரியலை இழுத்து மூடும் சன் டிவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!