
பொதுவாகவே வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டாத இசையமைப்பாளர் இளையராஜா, சமீக காலமாக தனது 75-வது வயது பிறந்த நாளை முன்னிட்டு பல கல்லூரிகளுக்கு விஜயம் செய்து, மாணவ-மாணவிகளுடன் தனது இசை அனுபவங்கள் குறித்து கலகலப்பாக உரையாடல் நிகழ்த்தி வருகிறார்.
இதற்கு, மாணவ - மாணவியர் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை, எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா, 4-வது தலைமுறையாக என்னுடைய பிறந்த நாளை இவ்வளவு ஆரவாரமாக கொண்டாடுவதில் உள்ளபடியே பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பள்ளிக்கே ஒதுங்காத என்னை, கல்லூரி மாணவ - மாணவிகள் தங்கள் இடத்துக்கு அழைத்து என் பிறந்த நாளைக் கொண்டாடி பெருமைப்படுத்துவது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இனியும், எந்த கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தாலும் ஆர்வமுடன் கலந்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்று இளையராஜா பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் மீடியாக்காரர்களின் ஒன்றிரண்டு கேள்விகளுக்கு இளையராஜா உற்சாகமாக பதிலளித்து வந்தபோது, ஒரு அரைவேக்காடு நிருபர் கொஞ்சமும் விவஸ்தையின்றி, மீடூ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.
வழக்கமாக, இதுபோன்ற கேள்விகளுக்கு கடும் கோபத்துடன் பதிலளிக்கும் இளையராஜா, பல்லைக்கடித்தபடி இந்த கேள்வியை கேட்டுட்டு நீ இங்கேயே இரு கண்ணா... என்று மட்டும் பதிலளித்துவிட்டு கடந்து சென்றார். இதற்கு முன்னர், சிம்பு-வின் பீப் நிகழ்ச்சி பரபரப்பாக இருந்தபோது, அது குறித்த கேள்வி கேட்ட நிருபரை இளையராஜா காய்ச்சி எடுத்ததை யாரும் அவ்வளவு இலேசில் மறந்திருக்க முடியாது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.